Tuesday, October 20, 2009

லாபவெறிக்குப் பலியாகும் வைட்டமின் “சி”!

வைட்டமின் சி மாத்திரைகளுக்கு கடுமையான பற்றாக்குறை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள், ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் மற்றும் பற்களில் குறைபாடுகள் உள்ள சிறுவர்கள் ஆகியோருக்கு மிகவும் அத்தியாவசியமானது வைட்டமின் சி மாத்திரையாகும். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக இந்த மாத்திரைகள் கிடைக்காமல் இவர்கள் சிரமப்படுகின்றனர்.

இந்தப் பற்றாக்குறைக்கு மருந்து நிறுவனங்களின் அலட்சியம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மாத்திரைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதால் கிடைக்கும் லாபம் குறைவாக இருப்பதால் அதிக ஈடுபாட்டை அவர்கள் காட்டுவதில்லை. பற்றாக்குறை ஏற்படுத்துவதன் மூலம் விலையை அதிகரிக்க அரசுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.