Monday, May 30, 2011

தடுப்பூசிப் போடப்பட்ட குழந்தைகள் மரணம் அதிகரிப்புசமீபகாலமாக, குறிப்பாக 2008 - ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியாவில் தடுப்பூசி போட்டதன் காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது நமக்கெல்லாம் ஒரு அதிர்ச்சியான தகவல். அண்மையில் கேரள மாநிலம் கண்ணுரைச் சேர்ந்த கே. வி. பாபு என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்டக் கேள்விக்கு மத்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் கொடுத்த தகவல் தான் இது என்பது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.

AEFI - Adverse Effect From Immunisation என்று சொல்லக்கூடிய தடுப்பூசி போடப்பட்டதால் ஏற்பட்ட குழந்தைகள் மரணம் என்பது, 2001- ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை 136 எனவும், அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் 2008 முதல் 2010 வரை 355 குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள் என்கிற உண்மை மத்திய அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மேலும் 2001 முதல் 2010 வரை தடுப்பூசி போடப்பட்டதால் மரணமடைந்த குழந்தைகளின் எண்ணிக்கையையும் வெளியிட்டிருக்கிறது. 2001 - ஆண்டு அப்படிப்பட்ட குழந்தை மரணம் இல்லை. அதே சமயத்தில் 2002 - ஆம் ஆண்டு ஆறு குழந்தைகளும், 2003 - ஆம் ஆண்டு 13 குழந்தைகளும், 2004 - ஆம் ஆண்டு 23 குழந்தைகளும், 2005 - ஆம் ஆண்டு 18 குழந்தைகளும், 2006 - ஆம் ஆண்டு 54 குழந்தைகளும், 2007 - ஆம் ஆண்டு 32 குழந்தைகளும், 2008 - ஆம் ஆண்டு 111 குழந்தைகளும், 2009 - ஆம் ஆண்டு 116 குழந்தைகளும், 2010 - ஆம் ஆண்டு 128 குழந்தைகளும் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது அரசே தரும் தகவல் என்றால் உண்மையான மரண எண்ணிக்கை நிச்சயம் அதிகமாக இருக்கும். '

தடுப்பூசியால் உண்டாகும் குழந்தைகள் மரணத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் :

ஒன்று - இடதுசாரிகள் ஆதரவு பெற்ற சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 1 - இன் ஆட்சிகாலத்தில் - இடதுசாரிகளின் கண்காணிப்பில் ஆட்சி நடந்தபோதே அன்புமணி ராமதாஸ் போன்ற சுயநலக்காரர்கள் மத்திய அமைச்சர் என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படித்தான் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது மத்திய அரசுக்கு சொந்தமான இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 103 - ஆண்டுகள் வயதான Central Research Institute (CRI ), தமிழ்நாட்டிலுள்ள குன்னூரில் இருக்கும் நூறு ஆண்டுகளைக் கடந்த Pasteur Institute of India ( PII ), சென்னையிலிருக்கும் அறுபது ஆண்டுகளைக் கடந்த BCG Vaccine Laboratory ( BCGVL ) போன்ற தடுப்பூசி நிறுவனங்களை 2008 -ஆம் ஆண்டு தன்னிச்சையாக மூடிவிட்டார் என்பது மட்டுமல்ல அதன் பிறகு தனியார் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளையே குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தியதால் தான் 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது மறைக்க முடியாத உண்மை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டுக்குப் பிறகு மூடப்பட்ட அந்த நிறுவனங்கள் இன்றைக்கு திறக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு - முன்பெல்லாம் ஒரு நாடு தடுப்பூசிகளோ, மருந்துகளோ புதிதாக கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அந்த கண்டுபிடிப்புகளை குரங்கு, எலி போன்றவற்றிற்கு செலுத்தி சோதனை செய்தபிறகு தான் அதன் வெற்றியை பொறுத்து மக்களுக்கு செலுத்துவார்கள். அப்படி செய்தால் மக்களுக்கு பாதிப்புகளோ உயிரிழப்புகளோ இருக்காது. ஆனால், இன்றைக்கோ அமெரிக்கா மற்றும் அதை சார்ந்த நாடுகள் புதிய தடுப்பூசிகளோ அல்லது புதிய மருந்துகளோ கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அதை குரங்கு - எலி போன்றவற்றிற்கு செலுத்தி சோதனைச் செய்வதில்லை. நேரடியாக மனிதர்களுக்கே போட்டே சோதனை செய்கிறார்கள். அந்த மனிதர்கள் வேறு யாருமல்ல - இந்தியர்கள். அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களில் - சேரிகளில் வாழும் தலித் மக்களைத் தான் இன்றைக்கு சோதனை எலிகளாக பயன்படுத்துகிறார்கள். இந்த வகையான சோதனை என்பது மத்திய அரசின் அனுமதியில்லாமல் நடைபெற வாய்ப்பில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இப்படித்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன் புதுடெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவன மருத்துவமனை ( AIIMS ) -யில் தனியார் தயாரித்த புதியவகை தடுப்பூசி போடப்பட்டதால் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள் என்பதும் மறைக்க முடியாத உண்மை.

அண்மையில் சென்ற ஆண்டு, பெண்களுக்கு விலா எலும்பில் வரக்கூடிய cervical cancer என்கிற புதிய வகை புற்றுநோய்க்கு தடுப்பூசி புதிதாக கண்டுபிடிக்கப் பட்டிருகிறது. அது ஒரு அமெரிக்க நிறுவனம் என்றும் சொல்லபடுகிறது. அப்படி கண்டுபிடிக்கப் பட்ட புதுவகை தடுப்பூசியை ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கிராமங்களில் வாழும் பத்து வயது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட தலித் பெண் குழந்தைகளுக்கு போட்டு சோதனை செய்தார்கள். அதில் ஆறு பெண் குழந்தைகள் மரணமடைந்தார்கள். பத்திரிகைகளிலும் செய்தியாக வந்தது. அன்றைய தினம், பாராளுமன்ற மாநிலங்களவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் இந்த பிரச்சனையை எழுப்பி கண்டித்துப் பேசியதுமட்டுமல்லாமல், பெண் குழந்தைகளுக்கு அந்த புதிய வகை தடுப்பூசி போடுவதை நிறுத்தவும் செய்தார்.

மேற்குறிப்பிட்ட இரண்டு தகவல்களும், நம் நாட்டு குழந்தைகள் மீதான மத்திய அரசின் அலட்சியத்தையும் , பொறுப்பின்மையையும் தான் காட்டுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு காட்டுகிற அதீத விசுவாசம் நம் நாட்டுக் குழந்தைகளை பலி வாங்குகிறது என்பது தான் உண்மை.

தகவல்கள் : The Hindu / 29-05-2011

Saturday, March 19, 2011

உலகில் ஐந்தில் ஒரு பங்கு காச நோயாளிகள் இந்தியர்கள்

இந்தியாவில் காச நோயினால் பாதிப்புக்குஉள்ளாகியுள்ளவர்கள்எண்ணிக்கை 180 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 80 லட்சம் பேர் சளியில் கிரிமியுள்ள தீவிர காசநோயாளிகள் ஆவார்கள். உலகில் ஐந்தில் ஒரு பங்கு காச நோயாளிகள் இந்தியர்கள் என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.எய்ட்ஸ் வியாதியுள்ள நோயாளிக்கு காச நோய் எளிதில் தொற்றிக் கொள்கிறது. காச நோய் ஒரு தொற்று நோயாகும். சளியில் கிருமியுள்ள காச நோயாளி வருடத்துக்கு 10 முதல் 15 நபர்களுக்கு காச நோ¬யைப் பரப்புகிறார்.

இந்தியாவில் மூன்று நிமிடத்துக்கு ஒருவர் காச நோயினால் இறக்கிறார்.காச நோயின் தீவிரத்தை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் 1993-ல் டி.பி என அழைக்கப்படும் காச நோயை உலகெங்கும் தீவிரமாக ஒழிக்க உடனடி நடவடிக்கையில் இறங்கி ஆலோசனைகளை வழங்கியதுடன், மருத்துவ தொழில் நுட்பத்தையும் உருவாக்கியது.இதன்படி திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் டாட்ஸ் சிகிச்சை மூலம் காச நோய் முற்றிலும் குணப்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் பல மையங்கள் துவக்கப்பட்டு ஒவ்வொரு மையத்திலும் தனி மருத்துவர்கள், ஆய்வுக் கூட நிபுணர், சுகாதார மேற்பார்வையாளர் பணியாற்றுகின்றனர். நோய் அறிகுறி உள்ள ஒருவருக்கு காலையில் முதலில் உருவாகும் சளி மற்ற நேரங்களில் உருவாகும் சளி என மூன்று முறை சளி பரிசோதனை செய்யப்பட்டு காச நோய் உறுதி செய்யப்பட்டு டாட்ஸ் சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

காச நோயாளிகளுக்கு டாட்ஸ் முறையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் இலவசமாக ஒரு மருந்து பெட்டியாக ஒதுக்கப்பட்டு 6 மாதம் முதல் 8 மாதம் வரை எடுத்துக் கொள்ளும் வகையில் அளிக்கப்படுகிறது. அதை நோயாளி ஒரு மருந்து அளிப்பவரின் முன்னிலையில் உட்கொள்ள வேண்டும். மருந்துகள் முழுமையாக மருத்துவர் அறிவுரைப் படி எடுத்துக் கொள்ளும் போது நோய் முற்றிலும் குணமடையும்.

காச நோயாளிக்கு நேரடியாக மாத்திரைகள் கொடுக்க முன் வரும் மகளிர் குழுக்கள், தனியார் மருத்துவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்கு ரூ.250 ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது.ஈரோடு மாவட்டத்தில் 2001 முதல் தீவிர காச நோய் தடுப்புத் திட்டம் 27 சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது வரை 2 , 58, 562 நபர்களுக்கு சளிப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 23,740 நபர்கள் சளியில் கிருமியுள்ள காச நோயாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 13,000 பேருக்கு காசநோய் முற்றிலும் குணப்படுத்தப்பட்டுள்ளது.


1882-ம் ஆண்டு மார்ச் 24-ம் நாள் ஜெர்மானிய மருத்துவ அறிஞர் ராபர்ட் கோச் காசநோய்க்கான நுண்கிருமியை கண்டறிந்தார். அப்போது அவர் “இந்த கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்றாவிட்டால் எனது வாழ்க்கைக்கு அர்த்தமில்லை” என குறிப்பிட்டார். அது போல் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காச நோயை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கியூபாவின் சாதனைகாச நோய் பாதிப்பு குறைவான நாடு என்ற அந்தஸ்தை கியூபாதான் பெற்றுள்ளது. சோசலிச அமைப்பின் சுகாதாரக் கொள்கைகளே இத்தகைய நிலைமை உருவானதற்குக்காரணமாக இருந்திருக்கிறது. கியூபாவில் சராசரியாக ஒரு லட்சம் மக்களில் ஏழு பேர் மட்டுமே காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். உலக சுகாதாரக் கழகத்தால் 1971 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு மருந்தை தவறாமல் கியூபாவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதோடு, சிறிய மருத்துவமனையாக இருந்தாலும் அங்கு காச நோய்க்கு சிறப்பு மருத்துவர் இருக்குமளவுக்கு கியூபாவின் மருத்துவத்துறை பெரிய அளவில் முன்னேறியுள்ளது.

இது குறித்து கியூபாவின் பொது சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த அன்டோனியோ ஃபிகியோரோ கூறுகையில், 1959 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் நேரடி பலன்களில் இதுவும் ஒன்றாகும். மருத்துவத்துறையினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைத் திட்டங்களே இத்தகைய சாதனைக்கு இட்டுச் சென்றன என்று குறிப்பிட்டார்.

Thursday, March 10, 2011

வலி நிவாரணி மருந்துகளால் லட்சம் பேருக்கு சிறுநீரக பாதிப்புவலி நிவாரணி மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் சிறு நீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உலக சிறுநீரக தினத்தையொட்டி பொதுமக்களுக்கு சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மருத்துவ கல்லூரியில் வியாழனன்று (மார்ச் 10) கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மருத்துவர்கள் இதனை தெரிவித்தனர். சிறுநீரக நோய் வருவதற்கு பல காரணம் இருந்தாலும் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் நோய் இதற்கு முக்கிய காரணம். மேலும் மக்களின் உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றால் இந்நோய் அதிகரிக்கிறது.

முறையான கவனிப்பின்றி சிறுநீரக நோய் முற்று மானால் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அல்லது மாற்று சிறுநீரகம் என்பதை தவிர வேறு வழியில்லை.

விபத்தில் இறந்தோரின் சிறுநீரகம், மூளை செயல் இழந்தவரின் சிறுநீரகத்தை இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பயன்படுத்தலாம். 2010ம் ஆண்டு மட்டும் 66 மாற்று சிறுநீரக சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.

எனவே, ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஆபத்தி லிருந்து தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த கருத்தரங்கில் தமிழக அரசின் மக்கள் நல் வாழ்வு செயலர் சுப்புராஜ், மருத்துவமனை இயக்குனர் வம்சதாரா, கல்லூரி முதல்வர் கனகசபை, பேராசிரி யர்கள் கோபாலகிருஷ்ணன், அமால், மெய்யப்பன் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.

Thursday, February 17, 2011

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் 3 மாத்திரைகளுக்கு தடை


பக்க விளைவுகளை ஏற்படுத்தும் 3 மாத்திரைகளுக்கு இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கவுன்சில் தடை விதித்துள்ளது.

"கேட்டிபிளாக்சாஸின்' எனப்படும் ஆன்டிபயாட்டிக் மாத்திரை, இரைப்பை-குடல் மருத்துவம் தொடர்புடைய "டெகாசெராட்' மாத்திரை, மனநல மருத்துவம் தொடர்புடைய டீ-ஆன்சிட் மாத்திரை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

"கேட்டிபிளாக்சாஸின்' மாத்திரை, உட்கொண்டவுடன் திடீரென ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் அல்லது ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டதாகும்.

வயிறு உப்புசம்-மலச்சிக்கல்-அடிக்கடி மலம் கழிக்கும் பிரச்னைக்கு உட்கொள்ளப்படுவது "டெகாசெராட்' மாத்திரை.

மன நல மருத்துவத்தில், ஆழ்ந்த மன வருத்தப் பிரச்னையைச் சரி செய்ய பரிந்துரைக்கப்படும் மாத்திரை "டீ-ஆன்சிட்' ஆகும்.

இவை பக்க விளைவுகளை ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் இந்த மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைக்கவும், விற்பனை செய்யவும் இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கவுன்சில் தடை விதித்துள்ளது.

மூட்டு வலி உள்பட பல்வேறு வலிகளுக்கு வலி நிவாரணியாக பரிந்துரைக்கப்பட்ட "நிமுஸ்லைட்' ஆன்டிபயாட்டிக் மாத்திரையும் பக்க விளைவு காரணமாக அண்மையில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் அலோபதி என்று அழைக்கப்படும் ஆங்கிலமுறை மருத்துவத்தில் புழங்கும் மாத்திரைகளாகும்

Friday, November 5, 2010

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளின் யுகம் முடிந்துவிட்டதா?

உடலில் செலுத்தப்படும்போது சில வகையான நோய்க்கிருமிகளை வளரவிடாமல் தடுத்து அந்த நோயை எதிர்த்துப் போராடும் சக்தியைக் கொடுக்கும் வேதியியல் பொருட்கள் `நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகள்’ என அழைக்கப்படுகின்றன. சுமார் 60 ஆண்டு காலமாக மருத்துவ உல கில் அவற்றின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

1929ஆம் ஆண்டில் அலெக் ஸாண்டர் ஃப்ளெமிங் (1881-1955) பெனிசிலின் என்ற மருந்தைக் கண்டுபிடித்த திலிருந்து ஆன்ட்டிப யாட்டிக் யுகம் தொடங்கியது. 1940-களில் பெனிசிலினைத் தாராளமாகப் பயன்படுத்தும் சிகிச் சை முறை வேரூன்றத் தொடங்கியது. 1942ஆம் ஆண்டில் அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் 33 வயது பெண்மணி ஒருவர் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் என்ற நுண்கிருமியின் காரணமாக ஏற்பட்ட தொற்று நோயினால் பீடிக்கப்பட்டு உயிருக் குப் போராடிக் கொண்டிருந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது ரத்த ஓட்டத்தி லிருந்து அந்த நுண்கிருமிகளை அகற்ற முடியவில்லை. கடைசியில் ஒரு சிறிதளவு பெனிசிலினை அவ ரது உடலில் செலுத்தினர். முன் னேற்றம் தெரிந்தது. மேலும் சில தடவைகள் பெனிசிலினைச் செலுத் தியதும் ஆச்சரியமான முறையில் அவர் முற்றிலும் குணமடைந்து பின்னர் 91 வயது வரை வாழ்ந்து மறைந்தார் !

பெனிசிலின் யுகம் இப்படித் தான் ஆரம்பமானது. நிமோனியா, ஸ்கார்லெட் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு பெனிசி லின் அருமருந்தாகப் பயன்பட்டது. ஆனால் டைஃபாய்டு, இன்ஃப்ளூ யன்சா போன்ற வேறு பல நோய் களை எதிர்த்துப் போராட பெனி சிலினால் இயலவில்லை. எனவே, வேறு ஆன்ட்டிபயாட்டிக் மருந்து களைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடங்கியது. நிமோனியா, ஸ்கார் லெட் காய்ச்சல், ரத்தத்தில் விஷக் கலப்பு போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்தவல்ல சல்ஃபோன மைட் 1940-களின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காசநோய், டைஃபாய்டு போன்ற தொற்று நோய்களைக் குணப்படுத் தும் ஸ்ட்ரெப்டோமைசின், மூளை, தண்டுவடத்தைப் பாதிக்கும் நோய் கள் அல்லது தோல், கண், காது களைப் பாதிக்கும் நோய்களைக் குணப்படுத்த களிம்பு அல்லது சொட்டுமருந்து வடிவில் குளோ ராம்பினிகால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று, சில பால்வினை நோய்களைக் குணப்படுத்த டெட் ராசைக்ளின் ஆகிய ஆன்ட்டிபயாட் டிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட் டன. ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளின் துணையின்றி எந்த அறுவை சிகிச்சையோ, புற்றுநோய் சிகிச் சையோ அல்லது எச்.ஐ.வி. சிகிச் சையோ மேற்கொள்ள முடியாது என்ற நிலை கடந்த ஆண்டுகளில் தோன்றிவிட்டது. தற்போது அதற்கு ஆபத்து வந்துவிட்டது.

நுண்ணுயிர்களும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும்

ஒரு மனிதருக்கு வெட்டுக்கா யம் ஏற்படும்போது தோலில் ஏற் படும் வெடிப்பின் வழியாக உடலுக் குள் சில தீயவகை கிருமிகள் புகுந்துவிடும். அந்த மனிதர் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் அவரி டம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தேவையற்ற கிருமிகளோடு போராடி அவை உடலுக்குள் நுழைவதைத் தடுத்துவிடும். பலவீனமான உடல் நிலையுடன் அவர் இருந்தாலோ கிருமிகள் வீரியமிக்கவையாக இருந்தாலோ அவை நோயை உரு வாக்குவதில் வெற்றிபெற்று விடு கின்றன. காயங்கள் வழியாகத் தான் நோய்க்கிருமிகள் உடலுக்குள் நுழைய வேண்டுமென்பதில்லை. உணவு, தண்ணீர், காற்று, உமிழ் நீர், உடலிலிருந்து வெளிப்படும் பிற திரவங்கள் என எதன்வழியாக வும் அவற்றால் நுழைந்துவிட முடி யும். நம் உடலில் கோடிக்கணக் கான நுண்ணுயிர்கள் (செல்க ளின் எண்ணிக்கையைப் போல் 10 மடங்கு) உள்ளன! அவற்றில் பெரும்பாலானவை நமக்குத் தீங்கு செய்யாதவையே. நட் புணர்வுடன் உள்ள பல நுண்ணுயிர் களை ஆன்ட்டிபயாட்டிக் மருந்து கள் அழித்து விடுவதால், அம்மருந் துகள் நோயைக் குணப்படுத்தும் சக்தியை காலப்போக்கில் இழந்து விடுகின்றன. நோய்க்கிருமிக ளோடு போராடி அவற்றை அகற்ற வல்ல அதிசய மருந்துகளாக ஒரு காலத்தில் கருதப்பட்ட அவை இன்று அக்கிருமிகளோடு போரா டும் சக்தியை இழந்து நிற்கின்றன. ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் இருந்த கையறு நிலையை அநேக மாக இன்று அடைந்து விட்டோம். மருத்துவ உலகம் சந்திக்கும் மிகப் பெரிய சவால் இது. (ஆதாரம் : சயன்ஸ் ரிப்போர்ட்டர்)

மருத்துவ வல்லுநர்கள் இன்று பரிந்துரைப்பவை

மிகமிக அவசியமாகத் தேவைப் பட்டாலொழிய ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஆன்ட்டிபயாட்டிக் சிகிச்சையை அரைகுறையாகச் செய்யாமல் தீங்கு விளைவிக்கும் கிருமி கள் முழுமையாக அகற்றப்படும் வரை தொடர வேண்டும். காய் கறிகள், பழங்களை நன்கு கழுவிய பிறகே உட்கொள்ள வேண்டும். அவ்வப்போது கைகளை நன்கு கழுவிக் கொள்வது பாதுகாப்பைத் தரும். மருத்துவரின் பரிந்துரை யின்றி கடைகளில் ஆன்ட்டிபயாட் டிக் மருந்துகளை நாமே வாங்கி உட்கொள்வது ஆபத்தானது.

Wednesday, November 3, 2010

மருந்துகளும், குறைபாடுகளும்

டவானா வில்லியம்ஸ், சாப்பிடுவது, தலைமுடியை சீவி, பின்னிக் கொள்வது, டைப் ரைட்டரில் டைப் அடிப்பது என அனைத்து வேலைகளையும் தனது கால்விரல்களால்தான் செய்து கொள்கிறார். அவருக்கு வேறு வழியில்லை.

1960களில் உலகில் பிறந்த குழந்தைகளில் 12,000 பேருக்கு ஊனம். “தலிடோமைட் டிராஜடி” என மருத்துவ வரலாற்றில் அழைக்கப்படும் இது ரத்தக்குழாய்களை பாதித்து, கை, கால், கண்கள், சிறுநீரகத்தையும் பாதிக்கிறது.

1957ல் மேற்கு ஜெர்மானிய நிறுவனமான “க்ருனென்தால்” தூக்கமின்மையால் அவதிப்பட்டவர்களுக்கு தூங்க வைக்க “தலிடோமைட்” என்ற மருந்தை கண்டுபிடித்தது. விற்பனையும் செய்தது. எதேச்சையாக, அது வாந்தியை குணப்படுத்துமென கண்டுபிடிக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி வருவதை தடுக்க கொடுக்கப்பட்டது. ஆனால், இதை சாப்பிட்ட தாய்மார்கள் பிரசவித்த குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. இதை தயாரித்த நிறுவனமான ‘க்ருனென்தால்’ எலிகள் மீது பரிசோதித்த பொழுது அபாயகரமான விளைவுகள் எதுவும் தெரியவில்லை என்று கூறிவிட்டது. ‘தலிடோமைட்’ கருவில் வளரும் குழந்தையை எப்படி பாதிக்கிறது என்பது புரியாமலேயே இருந்தது.

சமீபத்தில் (மார்ச் 12, 2010 சயன்ஸ் இதழ்) ஜப்பானிலுள்ள “டோக்கியோ இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி” வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், தலிடோமைட் மருந்தில் உள்ள செரிப்லான் (உநசநடெடிn) என்ற புரதம்தான் எலும்பு வளர்ச்சியை பாதிக்கிறது என தெரிவித்துள்ளது. ஆய்வாளர் ஹிரோஷி ஹண்டா, மீன்கள் மீது பரிசோதனை நடத்தியதில் தெரிய வந்த பின், கோழி குஞ்சுகள் மீதும் பரிசோதனை செய்ததில் அதே முடிவுக்கு வந்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சுவ்ரோ சட்டர்ஜி மற்றும் கே.பி.சந்திரசேகர் ஆகியோரும், இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

கர்ப்பம் தரித்த முதல் 5 வாரங்கள் மிகவும் முக்கியமானவை. கை, கால் வளரத் துவங்கும் இந்த சமயத்தில் தலிடோமைட் தாக்குதலால் பிறக்கும் குழந்தை ஊனத்துடன் பிறக்கிறது.

1962ல் தடை செய்யப்பட்ட இந்த மருந்து, சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து மீண்டும் சந்தையில் விற்கப்படுகிறது. 2006ல் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, தலிடோமைட் மீதான தடையை நீக்கிவிட்டது. ஆனால் குஷ்டம், மைலோமா எனப்படும் ஒரு வகை புற்றுநோய்க்கு மருந்தாக கட்டுப்பாடுகளுடன் விநியோகிக்கப்படுகிறது.

2008ல் ஜப்பானிலும், புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்த இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2002ல் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி பெற்று “டாபர் இந்தியா” குஷ்டத்தை குணப்படுத்த இதை விற்று வருகிறது. பிரேசிலிலும், மீண்டும் இது உபயோகத்திற்கு வந்துள்ளது. மீண்டும் “தலிடோமைட் குழந்தைகள்” பற்றிய அறிவிப்பு வெளியாகிறது. 1960களில் எப்டிஏ அனுமதி இன்றியே கர்ப்பிணி பெண்களுக்கு இது தரப்பட்டது. டவானா வில்லியம்ஸின் தாயும் இதை உட்கொண்டவர்தான். புதிதாக ‘தலிடோமைட் குழந்தைகள்’ பற்றி தகவல் வருவதால், இதில் கவனம் தேவை.

மருத்துவத்துறை இதில் கவனமாக இல்லாவிடில், டவானா போன்று பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். “புற்றுநோய், குஷ்டம் போன்ற வியாதிகளை குணப்படுத்துவதால் அதன் எதிர்கால பயன்பாட்டை மேலும் ஆராய வேண்டியுள்ளது, என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆதாரம் : லைஃப் சயின்ஸ்

--ஆர்.சந்திரா

Friday, October 15, 2010

தடுப்பூசி ஆலைகளை மூடியதன் அதிர்ச்சிப் பின்னணி முந்தைய சுகாதார அமைச்சகம் முறைகேடு: குலாம் நபி ஆசாத்துக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. கடிதம்


தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யும் குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட் உள்ளிட்ட 3 பொதுத்துறை ஆலைகளை மூடி யதில் முந்தைய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும், உலக சுகா தார அமைப்பிற்கும் தொடர்பு உண்டு என்று மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பி னர் டி.கே.ரங்கராஜன் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு டி.கே. ரங்கராஜன் எம்.பி. அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

பொதுத்துறையில் உள்ள தடுப்பூசி மருந்து உற்பத்தி ஆலை களை மூடுவது தொடர்பாக ஜாவேத் சவுத்ரி தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள் ளது பற்றி பத்திரிகை செய்திகள் வெளியாகியுள்ளன. உலகத் தரம் வாய்ந்த தடுப்பூசி மருந்து ஆலை கள் மூடுவதற்கு உ ங்கள் அமைச் சகத்தின் முன்னாள் உயர் அதி காரிகளும் அப்போதைய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும் இந்த முறையற்ற செயல்பாடுகளுக்கு காரணம் என குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மூடப்பட்ட இந்த ஆலை களை மீண்டும் திறக்க வேண்டும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத் தில் தாங்கள் பொறுப்பேற்ற பின் னர் 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி கடிதம் எழுதினேன். எனது வேண்டுகோளுக்கு சாதகமாக பதிலளித்து 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி எனக்கு கடி தம் எழுதி இருந்தீர்கள். தடுப்பூசி மருந்து உற்பத்தி நிறுத்தம் விலக் கிக் கொள்ளப்பட்டு, 3 தடுப்பூசி மருந்து ஆலைகள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மிகுந்த மகிழ்ச்சியை அளித் துள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட நிறுவனங்கள் மூடப்பட்டதில், உலக சுகாதார நிறுவனத்திற்கும் பங்குள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகி றேன். பன்னாட்டு பெரும் மருந்து நிறுவனங்களின் நட வடிக்கைகளுக்கு உலக சுகாதார நிறுவனம் துணை போவது போன்ற நிலை உள்ளது. வளரும் நாடுகளின் முடிவுகளில் ஆதிக் கம் செலுத்துவதாகவும் தெரி கிறது. ஐ.நா. அமைப்புகளில் பெரும் நிறுவனங்களே ஆதிக் கம் செலுத்துவது தொடர்பாக எப்.ஏ.ஓ. இயக்குனர் டாக்டர் சாமுவேல் சி.ஜூட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். தடுப்பூசி மருந்து ஆலைகள் மூடப்பட்ட விஷயத்தில் உலக சுகாதார நிறு வனத்திற்கு உள்ள பங்கு குறித்து ஜாவேத் சவுத்ரி குழு ஆய்வு செய் ததா என்பது எனக்கு தெரியவில்லை.

அப்படி ஆய்வு செய்திருக்க வில்லையெனில், உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளில் பன்னாட்டு மருந்துக் கம்பெனி களின் செல்வாக்கு இருப்பது குறித்தும் விசாரணை நடத்தப் பட வேண்டும்.

நமது நாட்டில் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் உள்ளனர். அவர் களில் மேற்கூறிய விவகாரங் களில் ஆலோசித்து இருக்க வேண் டும். இவ்விஷயத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் கருத்தை எதிர் பார்ப்பது ஏன் என்பதற்கான காரணம் எனக்கு தெரிய வில்லை.

உலக சுகாதார நிறுவனத்தில் பன்னாட்டு மருந்துக் கம்பெனி களின் ஆதிக்கம் இருப்பதால் அவற்றின் ஆலோசனையை சீன அரசு ஏற்கவில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். தற்போ தைய கமிட்டி ஆய்வு செய்ததில் சில முக்கிய கருத்துக்கள் புலப் பட்டுள்ளன. அதனை நீங்கள் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுத்துறை தடுப்பூசி சப் ளையை பூஜ்ய அளவிற்கு குறைப்பதால் நாட்டின் சுகாதா ரப் பாதுகாப்பில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதுள்ள பொதுத்துறை தடுப்பூசி மருந்து ஆலைகளை ஒருங்கிணைந்த தடுப்பூசி வளா கம் (ஐ.வி.வி) செயல்பாட்டுக்கு முன் மூடுவதால் நாட்டில் தடுப் பூசி பாதுகாப்பின்மை 5 ஆண் டுகள் அல்லது அதற்கு மேலும் நீண்ட காலம் தொடரக்கூடும் என ஜாவேத் குழு அறிக்கை சுட் டிக்காட்டுவதன் மூலம் முந்தைய சுகாதாரதுறை அமைச்சகத்தின் செயல்பாடு கொடூரமாக இருந் துள்ளதை கண்டறிந்துள்ளது. இத்தகைய தேச விரோத காரி யத்திற்கு காரணமானவர்கள் கடு மையாக தண்டிக்கப்பட வேண்டும்.