Friday, October 15, 2010

தடுப்பூசி ஆலைகளை மூடியதன் அதிர்ச்சிப் பின்னணி முந்தைய சுகாதார அமைச்சகம் முறைகேடு: குலாம் நபி ஆசாத்துக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. கடிதம்


தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யும் குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட் உள்ளிட்ட 3 பொதுத்துறை ஆலைகளை மூடி யதில் முந்தைய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும், உலக சுகா தார அமைப்பிற்கும் தொடர்பு உண்டு என்று மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பி னர் டி.கே.ரங்கராஜன் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு டி.கே. ரங்கராஜன் எம்.பி. அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

பொதுத்துறையில் உள்ள தடுப்பூசி மருந்து உற்பத்தி ஆலை களை மூடுவது தொடர்பாக ஜாவேத் சவுத்ரி தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள் ளது பற்றி பத்திரிகை செய்திகள் வெளியாகியுள்ளன. உலகத் தரம் வாய்ந்த தடுப்பூசி மருந்து ஆலை கள் மூடுவதற்கு உ ங்கள் அமைச் சகத்தின் முன்னாள் உயர் அதி காரிகளும் அப்போதைய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும் இந்த முறையற்ற செயல்பாடுகளுக்கு காரணம் என குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மூடப்பட்ட இந்த ஆலை களை மீண்டும் திறக்க வேண்டும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத் தில் தாங்கள் பொறுப்பேற்ற பின் னர் 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி கடிதம் எழுதினேன். எனது வேண்டுகோளுக்கு சாதகமாக பதிலளித்து 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி எனக்கு கடி தம் எழுதி இருந்தீர்கள். தடுப்பூசி மருந்து உற்பத்தி நிறுத்தம் விலக் கிக் கொள்ளப்பட்டு, 3 தடுப்பூசி மருந்து ஆலைகள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மிகுந்த மகிழ்ச்சியை அளித் துள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட நிறுவனங்கள் மூடப்பட்டதில், உலக சுகாதார நிறுவனத்திற்கும் பங்குள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகி றேன். பன்னாட்டு பெரும் மருந்து நிறுவனங்களின் நட வடிக்கைகளுக்கு உலக சுகாதார நிறுவனம் துணை போவது போன்ற நிலை உள்ளது. வளரும் நாடுகளின் முடிவுகளில் ஆதிக் கம் செலுத்துவதாகவும் தெரி கிறது. ஐ.நா. அமைப்புகளில் பெரும் நிறுவனங்களே ஆதிக் கம் செலுத்துவது தொடர்பாக எப்.ஏ.ஓ. இயக்குனர் டாக்டர் சாமுவேல் சி.ஜூட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். தடுப்பூசி மருந்து ஆலைகள் மூடப்பட்ட விஷயத்தில் உலக சுகாதார நிறு வனத்திற்கு உள்ள பங்கு குறித்து ஜாவேத் சவுத்ரி குழு ஆய்வு செய் ததா என்பது எனக்கு தெரியவில்லை.

அப்படி ஆய்வு செய்திருக்க வில்லையெனில், உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளில் பன்னாட்டு மருந்துக் கம்பெனி களின் செல்வாக்கு இருப்பது குறித்தும் விசாரணை நடத்தப் பட வேண்டும்.

நமது நாட்டில் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் உள்ளனர். அவர் களில் மேற்கூறிய விவகாரங் களில் ஆலோசித்து இருக்க வேண் டும். இவ்விஷயத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் கருத்தை எதிர் பார்ப்பது ஏன் என்பதற்கான காரணம் எனக்கு தெரிய வில்லை.

உலக சுகாதார நிறுவனத்தில் பன்னாட்டு மருந்துக் கம்பெனி களின் ஆதிக்கம் இருப்பதால் அவற்றின் ஆலோசனையை சீன அரசு ஏற்கவில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். தற்போ தைய கமிட்டி ஆய்வு செய்ததில் சில முக்கிய கருத்துக்கள் புலப் பட்டுள்ளன. அதனை நீங்கள் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுத்துறை தடுப்பூசி சப் ளையை பூஜ்ய அளவிற்கு குறைப்பதால் நாட்டின் சுகாதா ரப் பாதுகாப்பில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதுள்ள பொதுத்துறை தடுப்பூசி மருந்து ஆலைகளை ஒருங்கிணைந்த தடுப்பூசி வளா கம் (ஐ.வி.வி) செயல்பாட்டுக்கு முன் மூடுவதால் நாட்டில் தடுப் பூசி பாதுகாப்பின்மை 5 ஆண் டுகள் அல்லது அதற்கு மேலும் நீண்ட காலம் தொடரக்கூடும் என ஜாவேத் குழு அறிக்கை சுட் டிக்காட்டுவதன் மூலம் முந்தைய சுகாதாரதுறை அமைச்சகத்தின் செயல்பாடு கொடூரமாக இருந் துள்ளதை கண்டறிந்துள்ளது. இத்தகைய தேச விரோத காரி யத்திற்கு காரணமானவர்கள் கடு மையாக தண்டிக்கப்பட வேண்டும்.