Saturday, March 19, 2011

உலகில் ஐந்தில் ஒரு பங்கு காச நோயாளிகள் இந்தியர்கள்

இந்தியாவில் காச நோயினால் பாதிப்புக்குஉள்ளாகியுள்ளவர்கள்எண்ணிக்கை 180 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 80 லட்சம் பேர் சளியில் கிரிமியுள்ள தீவிர காசநோயாளிகள் ஆவார்கள். உலகில் ஐந்தில் ஒரு பங்கு காச நோயாளிகள் இந்தியர்கள் என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.எய்ட்ஸ் வியாதியுள்ள நோயாளிக்கு காச நோய் எளிதில் தொற்றிக் கொள்கிறது. காச நோய் ஒரு தொற்று நோயாகும். சளியில் கிருமியுள்ள காச நோயாளி வருடத்துக்கு 10 முதல் 15 நபர்களுக்கு காச நோ¬யைப் பரப்புகிறார்.

இந்தியாவில் மூன்று நிமிடத்துக்கு ஒருவர் காச நோயினால் இறக்கிறார்.காச நோயின் தீவிரத்தை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் 1993-ல் டி.பி என அழைக்கப்படும் காச நோயை உலகெங்கும் தீவிரமாக ஒழிக்க உடனடி நடவடிக்கையில் இறங்கி ஆலோசனைகளை வழங்கியதுடன், மருத்துவ தொழில் நுட்பத்தையும் உருவாக்கியது.இதன்படி திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் டாட்ஸ் சிகிச்சை மூலம் காச நோய் முற்றிலும் குணப்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் பல மையங்கள் துவக்கப்பட்டு ஒவ்வொரு மையத்திலும் தனி மருத்துவர்கள், ஆய்வுக் கூட நிபுணர், சுகாதார மேற்பார்வையாளர் பணியாற்றுகின்றனர். நோய் அறிகுறி உள்ள ஒருவருக்கு காலையில் முதலில் உருவாகும் சளி மற்ற நேரங்களில் உருவாகும் சளி என மூன்று முறை சளி பரிசோதனை செய்யப்பட்டு காச நோய் உறுதி செய்யப்பட்டு டாட்ஸ் சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

காச நோயாளிகளுக்கு டாட்ஸ் முறையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் இலவசமாக ஒரு மருந்து பெட்டியாக ஒதுக்கப்பட்டு 6 மாதம் முதல் 8 மாதம் வரை எடுத்துக் கொள்ளும் வகையில் அளிக்கப்படுகிறது. அதை நோயாளி ஒரு மருந்து அளிப்பவரின் முன்னிலையில் உட்கொள்ள வேண்டும். மருந்துகள் முழுமையாக மருத்துவர் அறிவுரைப் படி எடுத்துக் கொள்ளும் போது நோய் முற்றிலும் குணமடையும்.

காச நோயாளிக்கு நேரடியாக மாத்திரைகள் கொடுக்க முன் வரும் மகளிர் குழுக்கள், தனியார் மருத்துவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்கு ரூ.250 ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது.ஈரோடு மாவட்டத்தில் 2001 முதல் தீவிர காச நோய் தடுப்புத் திட்டம் 27 சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது வரை 2 , 58, 562 நபர்களுக்கு சளிப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 23,740 நபர்கள் சளியில் கிருமியுள்ள காச நோயாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 13,000 பேருக்கு காசநோய் முற்றிலும் குணப்படுத்தப்பட்டுள்ளது.


1882-ம் ஆண்டு மார்ச் 24-ம் நாள் ஜெர்மானிய மருத்துவ அறிஞர் ராபர்ட் கோச் காசநோய்க்கான நுண்கிருமியை கண்டறிந்தார். அப்போது அவர் “இந்த கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்றாவிட்டால் எனது வாழ்க்கைக்கு அர்த்தமில்லை” என குறிப்பிட்டார். அது போல் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காச நோயை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கியூபாவின் சாதனைகாச நோய் பாதிப்பு குறைவான நாடு என்ற அந்தஸ்தை கியூபாதான் பெற்றுள்ளது. சோசலிச அமைப்பின் சுகாதாரக் கொள்கைகளே இத்தகைய நிலைமை உருவானதற்குக்காரணமாக இருந்திருக்கிறது. கியூபாவில் சராசரியாக ஒரு லட்சம் மக்களில் ஏழு பேர் மட்டுமே காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். உலக சுகாதாரக் கழகத்தால் 1971 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு மருந்தை தவறாமல் கியூபாவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதோடு, சிறிய மருத்துவமனையாக இருந்தாலும் அங்கு காச நோய்க்கு சிறப்பு மருத்துவர் இருக்குமளவுக்கு கியூபாவின் மருத்துவத்துறை பெரிய அளவில் முன்னேறியுள்ளது.

இது குறித்து கியூபாவின் பொது சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த அன்டோனியோ ஃபிகியோரோ கூறுகையில், 1959 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் நேரடி பலன்களில் இதுவும் ஒன்றாகும். மருத்துவத்துறையினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைத் திட்டங்களே இத்தகைய சாதனைக்கு இட்டுச் சென்றன என்று குறிப்பிட்டார்.

Thursday, March 10, 2011

வலி நிவாரணி மருந்துகளால் லட்சம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு



வலி நிவாரணி மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் சிறு நீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உலக சிறுநீரக தினத்தையொட்டி பொதுமக்களுக்கு சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மருத்துவ கல்லூரியில் வியாழனன்று (மார்ச் 10) கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மருத்துவர்கள் இதனை தெரிவித்தனர். சிறுநீரக நோய் வருவதற்கு பல காரணம் இருந்தாலும் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் நோய் இதற்கு முக்கிய காரணம். மேலும் மக்களின் உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றால் இந்நோய் அதிகரிக்கிறது.

முறையான கவனிப்பின்றி சிறுநீரக நோய் முற்று மானால் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அல்லது மாற்று சிறுநீரகம் என்பதை தவிர வேறு வழியில்லை.

விபத்தில் இறந்தோரின் சிறுநீரகம், மூளை செயல் இழந்தவரின் சிறுநீரகத்தை இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பயன்படுத்தலாம். 2010ம் ஆண்டு மட்டும் 66 மாற்று சிறுநீரக சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.

எனவே, ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஆபத்தி லிருந்து தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த கருத்தரங்கில் தமிழக அரசின் மக்கள் நல் வாழ்வு செயலர் சுப்புராஜ், மருத்துவமனை இயக்குனர் வம்சதாரா, கல்லூரி முதல்வர் கனகசபை, பேராசிரி யர்கள் கோபாலகிருஷ்ணன், அமால், மெய்யப்பன் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.