Friday, November 5, 2010

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளின் யுகம் முடிந்துவிட்டதா?

உடலில் செலுத்தப்படும்போது சில வகையான நோய்க்கிருமிகளை வளரவிடாமல் தடுத்து அந்த நோயை எதிர்த்துப் போராடும் சக்தியைக் கொடுக்கும் வேதியியல் பொருட்கள் `நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகள்’ என அழைக்கப்படுகின்றன. சுமார் 60 ஆண்டு காலமாக மருத்துவ உல கில் அவற்றின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

1929ஆம் ஆண்டில் அலெக் ஸாண்டர் ஃப்ளெமிங் (1881-1955) பெனிசிலின் என்ற மருந்தைக் கண்டுபிடித்த திலிருந்து ஆன்ட்டிப யாட்டிக் யுகம் தொடங்கியது. 1940-களில் பெனிசிலினைத் தாராளமாகப் பயன்படுத்தும் சிகிச் சை முறை வேரூன்றத் தொடங்கியது. 1942ஆம் ஆண்டில் அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் 33 வயது பெண்மணி ஒருவர் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் என்ற நுண்கிருமியின் காரணமாக ஏற்பட்ட தொற்று நோயினால் பீடிக்கப்பட்டு உயிருக் குப் போராடிக் கொண்டிருந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது ரத்த ஓட்டத்தி லிருந்து அந்த நுண்கிருமிகளை அகற்ற முடியவில்லை. கடைசியில் ஒரு சிறிதளவு பெனிசிலினை அவ ரது உடலில் செலுத்தினர். முன் னேற்றம் தெரிந்தது. மேலும் சில தடவைகள் பெனிசிலினைச் செலுத் தியதும் ஆச்சரியமான முறையில் அவர் முற்றிலும் குணமடைந்து பின்னர் 91 வயது வரை வாழ்ந்து மறைந்தார் !

பெனிசிலின் யுகம் இப்படித் தான் ஆரம்பமானது. நிமோனியா, ஸ்கார்லெட் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு பெனிசி லின் அருமருந்தாகப் பயன்பட்டது. ஆனால் டைஃபாய்டு, இன்ஃப்ளூ யன்சா போன்ற வேறு பல நோய் களை எதிர்த்துப் போராட பெனி சிலினால் இயலவில்லை. எனவே, வேறு ஆன்ட்டிபயாட்டிக் மருந்து களைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடங்கியது. நிமோனியா, ஸ்கார் லெட் காய்ச்சல், ரத்தத்தில் விஷக் கலப்பு போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்தவல்ல சல்ஃபோன மைட் 1940-களின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காசநோய், டைஃபாய்டு போன்ற தொற்று நோய்களைக் குணப்படுத் தும் ஸ்ட்ரெப்டோமைசின், மூளை, தண்டுவடத்தைப் பாதிக்கும் நோய் கள் அல்லது தோல், கண், காது களைப் பாதிக்கும் நோய்களைக் குணப்படுத்த களிம்பு அல்லது சொட்டுமருந்து வடிவில் குளோ ராம்பினிகால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று, சில பால்வினை நோய்களைக் குணப்படுத்த டெட் ராசைக்ளின் ஆகிய ஆன்ட்டிபயாட் டிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட் டன. ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளின் துணையின்றி எந்த அறுவை சிகிச்சையோ, புற்றுநோய் சிகிச் சையோ அல்லது எச்.ஐ.வி. சிகிச் சையோ மேற்கொள்ள முடியாது என்ற நிலை கடந்த ஆண்டுகளில் தோன்றிவிட்டது. தற்போது அதற்கு ஆபத்து வந்துவிட்டது.

நுண்ணுயிர்களும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும்

ஒரு மனிதருக்கு வெட்டுக்கா யம் ஏற்படும்போது தோலில் ஏற் படும் வெடிப்பின் வழியாக உடலுக் குள் சில தீயவகை கிருமிகள் புகுந்துவிடும். அந்த மனிதர் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் அவரி டம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தேவையற்ற கிருமிகளோடு போராடி அவை உடலுக்குள் நுழைவதைத் தடுத்துவிடும். பலவீனமான உடல் நிலையுடன் அவர் இருந்தாலோ கிருமிகள் வீரியமிக்கவையாக இருந்தாலோ அவை நோயை உரு வாக்குவதில் வெற்றிபெற்று விடு கின்றன. காயங்கள் வழியாகத் தான் நோய்க்கிருமிகள் உடலுக்குள் நுழைய வேண்டுமென்பதில்லை. உணவு, தண்ணீர், காற்று, உமிழ் நீர், உடலிலிருந்து வெளிப்படும் பிற திரவங்கள் என எதன்வழியாக வும் அவற்றால் நுழைந்துவிட முடி யும். நம் உடலில் கோடிக்கணக் கான நுண்ணுயிர்கள் (செல்க ளின் எண்ணிக்கையைப் போல் 10 மடங்கு) உள்ளன! அவற்றில் பெரும்பாலானவை நமக்குத் தீங்கு செய்யாதவையே. நட் புணர்வுடன் உள்ள பல நுண்ணுயிர் களை ஆன்ட்டிபயாட்டிக் மருந்து கள் அழித்து விடுவதால், அம்மருந் துகள் நோயைக் குணப்படுத்தும் சக்தியை காலப்போக்கில் இழந்து விடுகின்றன. நோய்க்கிருமிக ளோடு போராடி அவற்றை அகற்ற வல்ல அதிசய மருந்துகளாக ஒரு காலத்தில் கருதப்பட்ட அவை இன்று அக்கிருமிகளோடு போரா டும் சக்தியை இழந்து நிற்கின்றன. ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் இருந்த கையறு நிலையை அநேக மாக இன்று அடைந்து விட்டோம். மருத்துவ உலகம் சந்திக்கும் மிகப் பெரிய சவால் இது. (ஆதாரம் : சயன்ஸ் ரிப்போர்ட்டர்)

மருத்துவ வல்லுநர்கள் இன்று பரிந்துரைப்பவை

மிகமிக அவசியமாகத் தேவைப் பட்டாலொழிய ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஆன்ட்டிபயாட்டிக் சிகிச்சையை அரைகுறையாகச் செய்யாமல் தீங்கு விளைவிக்கும் கிருமி கள் முழுமையாக அகற்றப்படும் வரை தொடர வேண்டும். காய் கறிகள், பழங்களை நன்கு கழுவிய பிறகே உட்கொள்ள வேண்டும். அவ்வப்போது கைகளை நன்கு கழுவிக் கொள்வது பாதுகாப்பைத் தரும். மருத்துவரின் பரிந்துரை யின்றி கடைகளில் ஆன்ட்டிபயாட் டிக் மருந்துகளை நாமே வாங்கி உட்கொள்வது ஆபத்தானது.

No comments: