Tuesday, October 20, 2009

லாபவெறிக்குப் பலியாகும் வைட்டமின் “சி”!

வைட்டமின் சி மாத்திரைகளுக்கு கடுமையான பற்றாக்குறை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள், ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் மற்றும் பற்களில் குறைபாடுகள் உள்ள சிறுவர்கள் ஆகியோருக்கு மிகவும் அத்தியாவசியமானது வைட்டமின் சி மாத்திரையாகும். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக இந்த மாத்திரைகள் கிடைக்காமல் இவர்கள் சிரமப்படுகின்றனர்.

இந்தப் பற்றாக்குறைக்கு மருந்து நிறுவனங்களின் அலட்சியம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மாத்திரைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதால் கிடைக்கும் லாபம் குறைவாக இருப்பதால் அதிக ஈடுபாட்டை அவர்கள் காட்டுவதில்லை. பற்றாக்குறை ஏற்படுத்துவதன் மூலம் விலையை அதிகரிக்க அரசுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

Monday, August 24, 2009

பன்றிக்காய்ச்சல் பீதியும் பன்னாட்டு வியாபாரமும்!

மருத்துவர் அ.உமர் பாரூக்

பறவைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன் குன்யா, சார்ஸ்... இப்போது பன்றிக் காய்ச்சல்! இப்படி ஒவ்வொருவிதமான பெயர் தாங்கிய நோய்களைப் பற்றி பீதியை கிளப்பு வதும், அதன் மூலம் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் கொள்ளையடிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக சுகாதார அமைப்பு (றாடி) மற்றும் அரசாங்கங் களின் தெளிவற்ற நடவடிக்கைகள் மக்களை மேலும் பயமுறுத்துவதாக உள்ளது.

பன்றிக்காய்ச்சல் என்பது இன்று புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட விஷயமல்ல. 1918ல் தோன்றிய ப்ளூ காய்ச்சலில் எச்1என்1 வைர ஸின் சாயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1977ல் எச்1என்1, எச்3என்2 போன்ற வைரஸ் கள் காணப்பட்டன. அப்போதிருந்து இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வரு கின்றன. இன்னும் எவ்விதமான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது பரிந் துரைக்கப்படும் தமிஃப்ளூ மாத்திரை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகளாக கூறப்படும் சோர்வு, தசைவலி, சளி, இருமல், வாந்தி அல்லது பேதி போன்றவற்றில் ஒன்றிரண் டை போக்கும் என்று கூறப்படுகிறதே தவிர அது குணப்படுத்தும் மருந்தோ, தடுப்பு மருந்தோ அல்ல. ஆனால் மருந்துக் கம்பெனிகள் தங் களுடைய சந்தையை துவங்கிவிட்டன. ஒரு தமிஃப்ளூ மாத்திரையின் விலை 300 ரூபாய். பீதியையும் தேவையையும் பொறுத்து இன் னும் விலை கூடினாலும் ஆச்சரியமில்லை.

பன்றிக்காய்ச்சல் பற்றிய ஆய்வுகளின் முடிவுகளும், நடைமுறையும் குழப்பமான வையாக உள்ளன.

* வைரஸ் என்பது உலகிலேயே மிகவும் நுண்ணிய உயிர் என்று ஆங்கில மருத்து வம் கூறுகிறது. இது துணி, முகமூடி போன்றவற்றின் நுண்துளைகளை விடச் சிறியது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பிற்காக எந்தவித பயனுமற்ற முகமூடி களை சந்தையில் உலவவிட்டது யார்?

* பன்றிக்காய்ச்சலுக்கு காரணமான எச்1என்1 வைரஸ் காற்றில் பரவுவதாகக் கூறப்படுகிறது. அப்படி காற்றில் அதி வேகமாகப் பரவும் வைரஸ் ஒரு குடும்பத் தில் ஒரு நபரை மட்டும் தாக்குகிறது. ஒரு ஊரில் 5, 10 பேர்களை மட்டும் தாக்கு கிறது. இன்னும், இலங்கை அகதி முகாம்க ளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் சுகாதார வசதியற்றவர்களிடம் ஏன் பரவவில்லை? காய்ச்சல் பற்றிய பீதியும், மருந்து வியாபாரமும் மட்டுமே பரவுகிறது.

* அவ்வப்போது ஏற்படும் பறவைக்காய்ச் சல், டெங்குக்காய்ச்சல், சிக்குன் குன்யா, சார்ஸ் போன்றவற்றிற்கு காரணமாக கூறப்படும் கிருமிகள் எங்கிருந்து வரு கின்றன என்பதும், குறிப்பிட்ட காலத்திற் குப்பின் எங்கு செல்கின்றன என்பதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

* அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மைய அறிக்கைகளின்படி 2005ம் ஆண்டு முதல் 2009 பிப்ரவரி வரை பன்றிக்காய்ச் சலால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமே 12 பேர்தான்! நான்கு ஆண்டுகளில் இல் லாத புதிய வேகம் கிருமிகளுக்கு எங்கி ருந்து கிடைத்தது என்பது புரியாத புதிர்தான்.

இப்போது கண்டறியப்பட்டுள்ள எச்1என்1 வைரசில் - வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய பன்றிகளின் மரபணுக்களும், பறவைகள் மற்றும் மனித மரபணுக்களும் இணைந்து காணப்படுவதாக நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியிருக்கிறது.

மரபணு மாற்ற தொழில்நுட்ப ஆய்வுகளே எச்1என்1 வைரசின் தோற்றத்திற்கும், பெருக் கத்திற்கும் காரணம் என்று கூறுகிறார் தமிஃப்ளூ ஆய்வுக்குழுவின் உறுப்பினர் டாக்டர் ஆஸ்ட்ரோ அட்ரியன் கிப்ஸ்.

இவ்வளவு ஆய்வுகளும் அதன் குழப்பங் களும் ஆங்கில மருத்துவ அடிப்படையிலா னவை. மாற்று மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபங்சர் போன்ற மருத்துவங்களை அரசு எப்போதும் போல் இப்போதும் கண்டுகொள்வதில்லை.

காய்ச்சல் என்பது உடலில் ஏற்பட்டிருக் கும் நோய்க்கூறுகளை உடலே வெளியேற்றும் முயற்சியாகும். உடலின் எதிர்ப்பு சக்திக் கும் - நோய்க்கூறுகளுக்குமான போராட்டம் தான் வெப்பமாக வெளிப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் என்பதும் நோய்க்கெதிரான உட லின் போராட்டம்தான். உடலிற்கு துணை செய்யும்படியான இயற்கையான சிகிச்சை முறைகளை அரசுகள் பரிந்துரைப்பதுதான் மக்களையும், பொருளாதாரத்தையும் காக்கும் ஒரே வழி! ரசாயனத் தடுப்பு மருந்துகளின் பின்னால் ஓடுவது பன்னாட்டுக்கம்பெனி களை ஊக்குவிப்பதற்கும், பொருளாதார சீரழி விற்கும் வழிவகுக்கும்!

Wednesday, August 5, 2009

குழந்தைகளின் ஆரோக்கியம் தொலைவது ஏன்?

மிலிட்டரி பொன்னுசாமி
ஆதாரம் : ‘தி இந்து

பெற்றோர்களுக்கு தொலைக்காட்சி யால் தம் குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பு பற்றி கொஞ்சமும் தெரி வதில்லை. பிறந்ததிலிருந்து வளர்ந்து ஆளாகும் வரை கவனித்துப்பார்த்ததில், ஒருவன் வன்முறையாளனாக பரிணமிப் பதற்கு, பெற்றோர்களால் அடித்து வளர்க் கப்படுவது, அக்கறையற்று கண்டுகொள் ளப்படாமல் விடப்படுவது போன்றவை காரணிகளாக இருந்தாலும், தொலைக் காட்சியில் அவன் காணும் வன்முறைக் காட்சிகள்தான் பிரதானக் காரணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

டி.வி. பார்த்துக் கொண்டே அளவு தெரியாமல் உண்பது, அல்லது உண வைத் தவிர்ப்பது, அசையாமல் நெடு நேரம் இருப்பது என்பது, ஒன்று-உடல் பருமனை கூட்டுகிறது அல்லது ஊட்ட மின்றி உடல் நலிவு பெறச் செய்கிறது.

1995 வரை டி.வி. இல்லாமலிருந்த பிஜியில், அது வந்து மூன்று வருடங்கள் கழித்து பார்த்தபோது 11 சதவிகிதப் பெண்கள் அளவுக்கு மீறி உண்பது, பின் அதை வாந்தி எடுப்பது என்ற விநோத நோய்க்கு ஆளானார்கள். அதுவே சொந்த டி.வி. உள்ள வீடுகளில் மும்மடங்காக இருந்தது. சீனாவில் டி.வி. அறிமுகமான பிறகு, கச்சிதமான உடல் கொண்டிருந்த சீன மக்களின் உடல்வாகு மாறிவிட்டதை தெளிவாகப் பார்க்க முடிந்தது.

1000 குழந்தைகளை, 2 மணிநேரத் திற்கு மேல் டி.வி. பார்த்தவர்களை, 26 வருடங்களாக ஆய்வு செய்தபொழுது, குறிப்பாக 5 லிருந்து 15 வயதுள்ள குழந்தைகள் பல வருடங்களுக்குப் பிறகு ஆரோக்கியமற்றவர்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் சமூக அந்தஸ்து, பெற்றோர்களின் பழக்க வழக்கங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தபொழுது, கொழுப்புச்சத்து மிகுந்தவர்களாக, புகைப் பிடிப்பவர்களாக, உடல் திறனற்ற வர்களாக அவர்கள் பெரும்பாலும் இருந்தனர். அது இளவயதில் மிகுதியாக டி.வி. பார்த்ததன் நேரடி விளைவாகும்.

குழந்தைகளுக்கான டி.வி. நிகழ்ச்சிகளின் நீளத்தைவிட பொதுவான நிகழ்ச் சகளின் நீளம் 70 சதவிகிதம் அதிகம். காரணம் குழந்தைகளிடம் பரபரப்பையும், கிளர்ச்சியையும் அதிகரிக்க வைத்து அதிக நேரம் பார்க்க வைத்து தங்கள் ‘ரேட்டிங்’கை உயர்த்துவதற்கேற்ப படத் தொகுப்புமுறையை வடிவமைத்து, விறு விறுப்புக் குறையாமல் பார்த்துக் கொள் கிறார்கள். குழந்தைகளின் எதிர்பார்ப்பை தக்க வைக்க அவர்களின் உடலில் “டோபாமைன்” என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. காட்சி முடிந்து தங்கள் பாடத் தை படிக்கும்போது “டோபாமைன்” முந் தைய வேகத்தில் சுரக்காது. ஆகவே ஆர் வமும் முனைப்பும் மட்டுப்பட்டு பாடத் தை உள்வாங்க முடியாமல் போகிறது. கணிதம் போன்ற விளங்கிப் புரிந்து படிக்க வேண்டிய பாடங்களில் பலவீனம் உண்டாகிறது. தேர்வுகளில் மோசமான மதிப்பெண்கள் பெறுகிறார்கள். 1 மணி நேரத்திற்கு மேல் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 9 சதவீதம் கவனக்குறைவு அதிகரிக்கிறது.

இரவு 9 மணிக்கு குழந்தைகள் உறங்கச்செய்யப் பழக்க வேண்டும். அது, காலையில் நேரத்தே புத்துணர்வோடு எழுந்து செயலாற்ற உதவும். அவர்களின் எதிர்காலம் சிறக்கும்.

குறிப்பு : டிவி பார்ப்பதற்கும் படுக்கச் செல்வதற்கும் இடையே ஒரு மணி நேரம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

Tuesday, July 7, 2009

மறுக்கப்படும் மருத்துவ நலன் : அமெரிக்க அவலம்

துணைவியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை உடனடியாக நடத்தியாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார் ஜிம் ஹான் என்ற அமெரிக்கத் தொழிலாளி. அவசரம், அவசரமாக மருத்துவப் பரிசோதனைகளை முடித்துக் கொள்ள விரைகிறார் ராபர்ட்டோ புர்சாக். ஆஸ்துமாவால் அவஸ்தைப்படும் ஸ்டீவ் டிரேக் தனது மருந்தை தாமதப்படுத்த முடியுமா என்ற ஆபத்தான பரிசோதனையில் இறங்குகிறார். வேலையிழப்பால் மருத்துவ காப்பீடு வசதியையும் இழக்கப்போகிறோம் என்கிற நெருக்கடியால் இந்த மூவருமே இத்தகைய முடிவுகளுக்கு செல்கிறார்கள். அமெரிக்க நெருக்கடி துவங்கியதிலிருந்து இத்தகைய நிலையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சென்றுள்ளார்கள்.

கடந்த 25 ஆண்டுகளில் எப்போதுமே இல்லாத அளவிற்கு அமெரிக்கர்கள் வேலைகளை இழந்து வருகிறார்கள். மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி விழும் கதைதான். ஒரு புறம் வேலையிழப்பு. மறுபுறம், பணியிடத்தில் கிடைத்த மருத்துவக் காப்பீடு நின்று போனது. தொழிலாளர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்படும் காப்பீடு சுமார் 17 கோடி அமெரிக்கர்களுக்கு உள்ளது. தனியாக மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்க வேண்டுமென்றால் அதற்கான தொகையை சாமானியர்களால் கட்ட முடியாது. இதனால் நிறுவனத்தால் எடுக்கப்படும் காப்பீட்டை நம்பித்தான் பெரும்பாலான அமெரிக்கர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மருத்துவ செலவுகளும் உயர, உயரப் பறந்து கொண்டிருக்கிறது. இதை மனதில் கொண்டுதான் தனது துணைவிக்கு அவசரமாக ஃபோன் செய்த ஜிம் ஹான், எனது வேலையை விரைவில் இழக்கப்போகிறேன். நமக்குள்ள காப்பீடும் காலாவதியாகிவிடும். உடனடியாக உனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்து விடுவோம் என்கிறார். நெருக்கடியை உணர்ந்து கொண்டு விட்டாலும் ஹானால் தப்பிக்க முடியவில்லை. தனது துணைவியின் அறுவை சிகிச்சைக்கு முன்பே வேலையை இழந்து விடுகிறார். சொந்த வீட்டை விற்று வேறு வீட்டுக்கு குடியேறியுள்ளார். சிகிச்சைக்காக வாஷிங்டன் செல்வதற்கான செலவை நண்பர்களும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

மார்பகப் புற்றுநோயால் அவதிப்படும் புர்சாக் என்ற பெண் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். வேலையில்லாதவர்களுக்கு கிடைக்கும் நிவாரணத்தொகையில் பாதிக்கு மேல் மருத்துவ செலவுக்கு போய் விடுகிறது. நிறுவனங்களின் முன்னாள் ஊழியர்களுக்கு உள்ள காப்
பீடு கொஞ்சம் கைகொடுத்தாலும் அந்தக்காப்பீடும் இன்னும் ஒரு ஆண்டுக்குத்தான் வரும் என்பதால் அடுத்து என்ன என்பது புரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தனது நாற்பதுகளில் இருக்கும் அவர் 65 வயதுக்குப்பிறகுதான் அரசு தரும் மருத்துவ வசதிகளைப் பெற முடியும். நான் பயப்படத்துவங்கியுள்ளேன் என்று கூறும் புர்சாக்கின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்கிறது.

57 வயதாகும் டிரேக், தனது மார்பு இறுக்கமாகும் வரையில் ஆஸ்துமாவுக்கான மருந்து போடுவதைத் தவிர்க்கிறார். சில சமயங்களில் மருந்து போட்டுக்கொள்ளாமல் இருந்து விடவும் முயற்சிக்கிறார். நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த அவர் கடந்த ஆண்டு ஜூலையிலேயே வேலையிலிருந்து நீக்கப்பட்டார். தனது ஓய்வுக்கால நிதியிலிருந்து பணத்தை எடுக்கத் துவங்கிவிட்டார். ஏற்கெனவே மணிக்கட்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்
தில் இருந்த அவர், அதைச் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஒன்றரைக் கையோடு காலத்தை ஓட்டுவது என்று முடிவெடுத்துவிட்டேன் என்கிறார் டிரேக்.

இத்தகைய நெருக்கடியைச் சந்திப்பவர்களின் எண்ணிக்கை குறைவானதல்ல. அமெரிக்கப் புற்றுநோய் மையம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. புற்றுநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் என்று அதில் தெரியவந்தது. தாக்குப்பிடிக்க முடியாத செலவு என்பதுதான் இதற்குக்காரணமாக இருந்துள்ளது. மருத்துவ நலத்துறையை சீர்திருத்தம் செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உறுதி அளித்திருந்தார். ஆனால் எப்படி செய்வது என்பதில் பொதுக்கருத்து இதுவரை எட்டப்படவில்லை. இன்னும் பத்து ஆண்டுகளில் மருத்துவக்காப்பீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை6 கோடிக்கு மேல் உயரும் என்று ஆய்வொன்றில் வெளிப்பட்டுள்ளது. சொந்தக்கரங்களாலேயே குரல்வளையை நெரித்துக் கொள்ளும் வேலைதான் நடக்கிறது என்கிறார் பொருளாதார நிபுணர் ஒருவர்.

Thursday, June 11, 2009

தடைசெய்யப்பட்ட மருந்து டில்லியில் அமோக விற்பனை

பன்றிக் காய்ச்சல் நோய்க் கான தமிப்ளூ என்னும் மருந்து தடை செய்யப்பட் டிருந்த நிலையிலும், நாட்டின் தலைநகரில் அதிக விலைக்கு விற்பனை செய் யப்படுகிறது.

எச்1என்1 என்னும் வைரஸ் கிருமியால் தோன்றும் பன்றிக் காய்ச்சல் நோய் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி யுள்ளது. இந்தியாவிலும் சிலருக்கு இந்நோய் தாக்கி யிருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்நோய்க்கான மருந்தாக கருதப்படும் தமிப்ளூ இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் புதுடில்லியில் உள்ள பிரபல மருந்துக் கடைகளில் இம்மருந்து கூடுதல் விலைக்கு விற்கப் படுகிறது.

கன்னாட்பிளேஸ் பகுதி யில் உள்ள ஒரு மருந்துக் கடையில் 10 மாத்திரைகள் மூவாயிரம் ரூபாய்க்கு விற் பனை செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிப்ளூ மருந்து குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரான பிர்சிங் கூறு கையில், எச்1என்1 வைரஸ்க் கான ஒரே மருந்து தமிப்ளூ தான். பன்றிக்காய்ச்சல் நோய் இருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டும் இம்மருந்து இலவச மாகவே வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனை தவிர பிற மருத்துவமனையிலோ, மருந்துக் கடைகளிலோ இம்மருந்து விற்பனை செய் வது தடை செய்யப்பட்டுள் ளது என்று தெரிவித்தார். மருத்துவரின் முறையான ஆலோசனை இல்லாமல், தமிப்ளூ மருந்தை பயன் படுத்துவது பயனளிக்காது என்று தெரிவித்துள்ள அவர், அது ஆபத்தையும் உருவாக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

டில்லியைச் சேர்ந்த இரு வருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருப்பதை அடுத்து, தமிப்ளு மருந்துக் கான தேவை அதிகரித்துள் ளதாக மருந்து விற்பனையா ளர்கள் தெரிவித்துள்ளனர். மருந்துக் கடைகளுக்கு தொலைபேசி மூலம் விசா ரணை செய்யும் பொதுமக் கள், தமிப்ளூ மருந்து கிடைப் பது குறித்து விசாரணை செய்கின்றனர். குறிப்பாக பன்றிக்காய்ச்சல் நோய் பரவியுள்ள வெளிநாடு களுக்கு பயணம் செய்ய உள்ளவர்கள் அதிகளவில் இவ்விசாரணை செய்கின் றனர் என்றும் மருந்து விற் பனையாளர்கள் கூறுகின் றனர்.

இதனையடுத்து அம் மருந்தின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. தடை செய்யப்பட்ட மருந்தாக இருந்தாலும், 10 மாத்திரை கள் கொண்ட இம்மருந்து ரூ.2 ஆயிரத்து 800 முதல் ரூ.4 ஆயிரத்து 800 வரை பல் வேறு மருந்துக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன

Saturday, June 6, 2009

பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் அறிவியல் மோசடிகளும்

அணு ஆயுதங்கள், போதை மருந்து விற்பனைக்குப் பின் கொள்ளை லாபம் அளிக்கும் துறையாக மருந்து வியாபாரம் உள்ளது. மருந்து வியாபாரத்தில் உலகம் முழுவதுமே மருந்து சந்தையை பிடிப்ப தற்கு கடும்போட்டி நிலவி வருகிறது, வியாபார சந்தையை பிடிக்கும் ஒரே நோக் கத்தில் நியாயமான முறையில் வியாபாரம் செய்யும் போக்கை கைவிட்டு மக்களின் உயிரை பற்றிக்கூட கவலைப்படாமல் உயிரோடு விளையாடும் போக்கு அதிகரித்து வருகிறது.

ஒரு மருந்தினை சந்தையில் அறி முகப்படுத்தி விற்பனை செய்வதற்கு முன் அறிவியல் ரீதியாக முழு பரிசோதனை செய்யப்பட வேண்டும். அந்த மருந்து ஏற் படுத்தும் விளைவுகள், பக்க விளைவுகள், அது எந்தளவுக்கு உடலுக்கு பாதுகாப் பானது போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் அங்கீகரிக்கப் பட்ட தரச்சான்றிதழ் வழங்கும் நிறுவனங் களிடமிருந்து அத்தாட்சி பெறுவது அவசி யம் என்று நடைமுறையில் உள்ள சட்டத் திட்டங்கள் கூறுகிறது. இந்த அறிவியல் ரீதியான அத்தாட்சி பெற மருந்து கம்பெனி கள் மருத்துவ நிபுணர்களையும், மருத்துவ பத்திரிகை ஆசிரியர்களையும் அணுகி அவர்களின் உதவியை பெறுவது உண்டு. சட்டத்திட்டங்களை காற்றில் பறக்க விட்டு “வேலியே பயிரை மேய்ந்த கதை யாக’ நடந்த பெரும் அறிவியல் மோசடி தற்போது அம்பலமாகி உள்ளது. இதன் பின்னணியில் உலக அளவில் அறிவியல் மோசடி செய்த பன்னாட்டு நிறுவனங் களின் லாபவேட்கை குறித்தும் நியாய மற்ற போக்கு குறித்தும் ‘தி ஹிண்டு’ ஏடு அண்மையில் தலையங்கம் தீட்டியிருந்தது.

மருத்துவ ஆராய்ச்சியில் புள்ளி விவ ரங்களை திரித்து கூறி சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி பற்றிய விவரமும், வெளியிட்ட மருத்துவ பத்திரிகையின் பெரும் மோச டியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெ ரிக்காவில் உள்ள மாஸ்சூட்செட்ஸ் (ஆயளளயஉாரளநவவள) என்னும் பகுதியில் ஸ்பினிங் பீல்டு(ளுயீinniபே குநைடன) என்னும் இடத்தில் அமைந்துள்ள பேஸடேட் மெடிக்கல் சென்டரில் பணியாற்றும் ஸ்காட் எஸ் ரீபென் என்ற பிரபல மருத்துவர் மருந்து ஆராய்ச்சி மோசடியில் ஈடுபட்டுள்ளார். பன்னாட்டு மருந்து கம்பெனி பைசர் (ஞகணைநச) நிறுவனம் தயாரித்த ஸ்டிராய்டு அல்லா வலி நிவாரண மருந்தான செலிகாப்சிக் (ஊநடநஉடிஒib) வலி நிவாரணி மருந்தின் பரி சோதனை மற்றும் ஆராய்ச்சியில் தவ றான புள்ளி விவரங்களை அளித்து மோச டியில் ஈடுபட்ட குற்றத்திற்கு ஆளாகியுள் ளார். டாக்டர் ரீபென் 1996லிருந்து 2008ம் வருடம் வரை 12 வருடங்களாக மேற் கொண்ட ஆய்வின் அடிப்படையில் சமர்ப் பிக்கப்பட்ட 72 ஆய்வு அறிக்கையில் 21 ஆய்வு அறிக்கை, தவறான மற்றும் திரித்து கூறப்பட்ட புள்ளி விவரங்களை கொண் டுள்ளது ஆகும். இத்தகைய ஆராய்ச்சி யில், மருத்துவ நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் சார்ந்த அமைப்பு மற்றும் மருத்துவ பத்திரிகை ஆசிரியர் குழு ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய செயல் அறுவை சிகிச்கைக்குப்பின் அளிக்கப்படும் வலி நிவாரண மருந்தின் ஆராய்ச்சிக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் மூடநோக்கி யல் (டீசவாடியீயநனiஉள) மருத்துவ துறையில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் ரீபென் அளித்த செலிகாப்சிக் (ஊநடநஉடிஒib) உடன் இணைந்து மற்றொரு வலி நிவாரணி மருந்தினை அறுவை சிகிச் சைக்கு நோயாளிகளுக்கு பரிந்துரை செய் யப்படும் புதியமுறை நடைமுறைக்கு வந் தது. இதனை மல்டிமாடல் அனல்சஸிக் புரோடோகால் (ஆரடவi ஆடினநட யயேடநளநளiஉ யீசடிவடிஉடிட) என்பர். இது பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக காலப்போக்கில் அறு வைசிகிச்சை நோயாளிக்கு பரிந்துரைக் கப்படும் அளவுக்கு பெரும் முக்கியத் துவம் பெற்றது. “டாக்டர். ரீபென் நடத்தி யுள்ள மோசடி தற்போது வெளிவந்த கார ணத்தால் மருத்துவத்துறையில் பெரும் தாக்கத்தையும், ஆராய்ச்சிக்கு பாதிப்பும் ஏற்படுத்தியுள்ளது” என்று அனஸ்தீஸீயா அனல்ஜிசியா பத்திரிகை தலைமை ஆசிரியர் ஸ்டில் ஷாபெர் கருத்து தெரி வித்துள்ளார்.

பன்னாட்டு மருந்து கம்பெனி மெர்க் (ஆநசஉம) தயாரித்து விற்பனை செய்த ‘வயாக்ஸ்’ என்ற வலிநிவாரணி மருந்து (சூடிn ளுவநசடினையட யவேi iகேடயஅஅயவடிசல னசரப) இதய நோய் சம்பந்தமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தியதன் காரணமாக ‘வயாக்ஸ்’ மருந்து சந்தையிலிருந்து 5 வருடங்க ளுக்கு முன்பு வாபஸ் பெறப்பட்டது. மருந்து சந்தையிலிருந்து திரும்பப் பெறப் பட்டாலும் அது ஏற்படுத்திய சர்ச்சை ‘மெர்க்’ நிறுவனத்தை விட்டபாடில்லை. அண்மையில் மெர்க் நிறுவனம் நடத்திய அறிவியல் மோசடி வெளிச்சத்துக்கு வந் துள்ளது. இந்நிறுவனம் நடத்திய அறி வியல் மோசடி என்னவென்றால் தன் மருந்தின் வியாபார விற்பனைக்காக அறி வியல் நிகழ்வுகளை தாங்கிவரும் பத்திரிகை ஒன்றை இந்த நிறுவனமே அதை போலவே போலியாக வெளியிட் டுள்ளது என்பதே ஆகும்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அனுபவ மிக்க பிரபல மருத்துவர் ஒருவர், மெர்க் நிறுவனம் அளித்த நான்கு விஞ்ஞான பத்திரிகைகளை ஆழமாக அலசி ஆராய்ந்துதான், இது அசல் அல்ல; போலி என்பதை கண்டுபிடித்தார்.

வழக்கு விசாரணை நடக்க ஆரம்பித்த பின்னர்தான் இந்நிறுவனம் தனக்கு எதிராக திரும்பிய பிரச்சனைக்குரிய மருத்து வர்களை எவ்வாறு கவனித்தது என்பது தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் சிலரின் மேற்படிப்புக்கு பணமும், அவர்கள் ஆய்வு செய்வதற்குரிய பணமும், அவர்கள் மருத்துவ பள்ளி நடத்துவதற்கு உதவியும் என்று சகலவிதத்திலும் மருத்துவர்களை கவ னித்துள்ளது. இந்நிறுவனம் விரித்த ‘அன்பு’ வலைக்குள் சிக்காத மருத்துவர் களை அவதூறு செய்தும், மிரட்டியும் சமாளித்துள்ளது.

இன்னொரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், இங்கிலாந்து நாட்டிலுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத் தின்படி ‘தி கார்டியன்’ செய்தித்தாள் வெளி யிட்டுள்ள விஷயமாகும். அந்த செய்தித் தாள் கூற்றுப்படி வியாக்ஸ் மருந்து சாப்பிட்டதன் காரணமாக இதயநோய் சம்பந்த மான கோளாறு ஏற்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த நோயாளிகளுக்கு ஆதரவாக குரல்கொடுத்த அமைச்சர்களையே கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து அவர்களை ‘பல்டி’ அடிக்க வைத்த மெர்க் நிறுவனத்தின் செல்வாக்கு ஆகும்.

இந்திய நாட்டிலும் சன்பார்மா போன்ற மருந்து கம்பெனிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் லிட்ரஸோல் என்ற கடும் பக்க விளைவுகள் உள்ள கேன்சர் நோய்க்கு உண்டான மருந்தினை மகப்பேறு மருத்துவத்தில் பரிந்துரை செய்தது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட அறிவியல் அமைப்புகள், தொழிற்சங்கங் கள், அறிவியல் அறிஞர்கள், இடதுசாரி கட்சித் தலைவர்கள் ஆகியோர் இணைந்து நடத்திய எதிர்ப்பு இயக்கம் காரணமாக வாபஸ் பெறப்பட்டது.

-ஆர்.கண்ணன் ஆதாரம் : தி இந்து (மார்ச் 26, மே 20)

Thursday, April 9, 2009

மனித நேயம் கொண்ட சுகாதார சேவை

மீண்டும் சொல்லி அலுத்துப் போனாலும் அடிப்படை உண்மையை ஆழப்பதிந்து வைத்துள்ள திருக்குறள்

"நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய் நாடி வாய்ப்பச் செயல்"

என்பது. மருந்து என்ற அதிகாரத்தில் வரும் இந்தக் குறளினை எந்த விஷயத் திற்கும் பயன்படுத்தலாம் என்றாலும் சுகாதாரத் திற்கு நுட்பமான விளக்கம் தருவது இது.

நோயின் மூலக் கூறி னை ஆய்வு செய்து அத னை முளையிலேயே கிள்ளி எறிவது போன்றது தான் தடுப்பூசிகளும், தடுப்பு மருந்துகளும். அதிலும் குறிப்பாகக் குழந்தை களுக்குத் தடுப்பூசி போடு வது எதிர்காலத் தலை முறையை ஆரோக்கியமாக வைப்பதாகும்.

இளம்பிள்ளைவாதம், தட்டம்மை, கக்குவான் இருமல், காசநோய், தொண்டை அடைப்பான் போன்ற நோய்களைத் தடுக்க பிசிஜி, சொட்டு மருந்து, முத்தடுப்பு ஊசி போன்றவை பயன் பாட்டில் இருந்தது; இருக் கிறது. இத்தகைய தடுப் பூசிகள் போட்டு தடுப்பு மருந்துகள் பல ஆண்டு களாகக் கொடுக்கப்பட்ட தால் பிறந்த ஓராண்டில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு நூறு என்பதிலிருந்து 30க் கும் கீழாகக் குறைந்து விட்டது.

ஆண்டுதோறும் சுமார் 2 கோடியே 6 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப் பட்ட பிசிஜி காரணமா கவே இன்று பல வகை யான காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது. இதே போன்று முத்தடுப்பு ஊசி, ஜன்னி தடுப்பு ஊசி போன் றவை குழந்தைகளுக்கு மட் டுமின்றி பெரியவர்களுக் கும் பேறுகாலத்தில் தாய் மார்களுக்கும் பயன்படு கின்றன.

இவை அனைத்தும் பொதுத்துறையில் இயங்கி வந்தன. இதனால்தான் குறைந்த விலையில் அர சுக்கு இவை கொடுத்தன. அரசோ மக்களுக்கு இல வசமாகக் கொடுத்தது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக 1985ம் ஆண்டு தீவிரப் படுத்தப்பட்ட நோய்த் தடுப்பு தீவிரத்திட்டம் அவரது கட்சிக்காரர்க ளின் ஆட்சியிலேயே முட மாக்கப்படுகிறது. கிண்டி (சென்னை), குன்னூர் (நீல கிரி), கசோலி (இமாச்சலப் பிரதேசம்) ஆகிய இடங் களில் உள்ள தடுப்பூசி மருந்து தயாரிக்கும் மூன்று நிறுவனங்களுக்கும் மூடு விழா நடத்தித் தனியார் நிறுவனங்களுக்கு வர வேற்பு அளிக்க முன் வருகி றார்கள் என்பதை அண் மையில் குழந்தைகள் பாது காப்பு இயக்கம் அம்பலப் படுத்தியது. பிசிஜி நிறுவ னம் அரசுத்துறையின் கீழ் கிண்டியில் துவக்கப்பட்ட போது ராஜாஜி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். அந்தப் போராட்டத்தில் அவர் தோல்வியடைந்தார். ஆனால் இன்றைய ஆட்சி யாளர்கள் ராஜாஜியின் தனியார்மயக் கனவை நன வாக்கிக் கொண்டிருக் கிறார்கள்.

ஆனால் அந்த முயற்சி அவ்வளவு எளிதாய் வெற்றி பெற்றுவிடாது என்பதை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் தேர் தல் அறிக்கை உறுதி செய் கிறது. தடுப்பூசி மருந்து களையும், அத்தியாவசிய மருந்துகளையும் தயாரிக் கும் பொதுத்துறை நிறுவ னங்கள் மீண்டும் இயக்கப் படும் என்ற இக்கட்சியின் வாக்குறுதி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நோய் முதல் நாடுதல் என்ற அம்சம் இதிலே தான் இருக்கிறது. அத்தியா வசிய மருந்துகள் அனைத் தும் பொதுத்துறையில் தயாரிக்கப்பட்டால் மட் டும் போதுமா? உரியவர் கள் பயனடைய என்ன வழி? என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கும் பதில் அளித்துள்ள சிபிஎம் தேர்தல் அறிக்கை, பொதுச்சுகாதார அமைப் புகளான அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகா தார நிலையங்கள் போன்ற வற்றின் மூலமே தொடர்ச் சியாக இத்தகைய மருந்து கள் வழங்கப்படும்; அத்தி யாவசிய மருந்துகள் அனைத்தும் விலைக்கட் டுப்பாட்டு திட்டத்துக்குள் கொண்டுவரப்படும் என்று உறுதி கூறியிருப்பது மக் களின் மிகுந்த கவனத்துக் குரியவை. ஆபத்து விளை விக்கக் கூடிய மருந்துகள் சந்தையிலிருந்து முற்றிலு மாகக் களையப்படும் என்று அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதி மிக முக்கிய மானது. நோயை விட நோய்க்கான மருந்து கொடியது என்ற நிலை இதன் மூலம் நீங்கும்.

அரசு மருத்துவமனை கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் எளிதில் அணுகும் நிலையில் இல் லாததால் நோயால் பாதிக் கப்படுவோர் இவற்றை நாடுவதில் சிரமம் உள்ளது. எனவே அனைத்துவகை யான சுகாதார சேவை களும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென் றால், இவை மக்கள் எளி தில் சென்று உடல் நிலை யை கவனித்துக் கொள் ளும் தூரத்தில் இருக்க வேண்டும். இதற்கேற்பவும், பொதுசுகாதார முறை வலுப்படுத்தப்படும்; விரிவு படுத்தப்படும் என்று சிபி எம் உறுதியளித்திருக் கிறது. மேலும் மும்மயக் கொள்கைகளின் விளைவு சுகாதாரத்துறை மீதும் தொற்றுநோயாய் பற்றிக் கொண்டுள்ளது. அரசும் தனியாரும் இணைந்த கூட் டுத்துறை என்ற அளவில் மாற்று வடிவத்தனியார் மயப்போக்கு அகற்றப் படும் என்பதும் ஏழை - எளிய மக்களின் நலன் காக் கும் வாக்குறுதியாகும்.

இத்தனையையும் நிறை வேற்ற நிதி ஆதாரம் மிக மிக அவசியம். இதற்கான வழி என்ன? சுகாதாரத் துக்கான செலவு என்பது உண்மையில் மனித ஆற்றலுக்கான மூலதனமா கும். எனவே ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத அளவுக்கான நிதி பொதுசுகாதாரத்திற்கு செலவிடப்படுவதை உறுதி செய்கிறது சிபிஎம் தேர்தல் அறிக்கை.

மனிதர்களை மனிதர்களாக மதித்து அவர் களுக்கு சிகிச்சை அளிப் பது, மறுவாழ்வு கொடுப்ப தும் சுகாதார சேவையில் இன்றியமையாதது. ஆனால் மருந்து தயாரிப் பில் ஈடுபடும் சில `மெகா' நிறுவனங்கள் நோய்வாய்ப் பட்டவர்களுக்குத் தகவல் தெரிவிக்காமலேயே சில மருந்துகளை வழங்கி விஷப் பரீட்சை செய்கின் றன. இத்தகைய போக்கு தடுத்து நிறுத்தப்படும் என் றும், மருந்துகளின் சோத னைக்குக் கடுமையான கட் டுப்பாடுகள் கொண்டு வரப்படும்; விதிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் சிபிஎம் தேர்தல் அறிக் கையில் கூறியிருப்பது அக் கட்சியின் மனிதநேயத்தை யும், சுகாதார சேவைத் துறையில் தார்மீக பொறுப்பை நிலைநாட் டும் பொறுப்பையும் வெளிப்படுத்துகிறது என லாம்.

Wednesday, March 25, 2009

தடுப்பூசி நிறுவன விவகாரம் ஆய்வுக் குழு பரிந்துரை ஏற்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்

தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பாக ஆய்வுக் குழு வின் பரிந்துரைகளை ஏற்க மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 

தடுப்பூசி மருந்து ஆய் வக உற்பத்தி தொடர்பாக கடந்த மாதம் நாடாளு மன்ற நிலைக்குழுவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் கடிதம் எழுதியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறைக்கு 12 கேள்விகள் அடங்கிய கடிதத்தை பிரதமர் அலு வலகம் அனுப்பியிருந்தது. 

இந்நிலையில் கசவுளி, குன்னூர் மற்றும் சென்னையில் உள்ள ஆய்வக நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. 

இக்குழு தனது பரிந் துரையை மத்திய சுகாதாரத் துறையிடம் அளித்துவிட்டது. இப்பரிந்துரை அனைத்தையும் அமல் படுத்தப்படும் என கடந்த 13 ஆம் தேதியன்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது. அதற்கான திட் டங்களை அனுப்பவும் கோரியுள்ளது. 

இதனிடையே மார்ச் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் குன்னூர் பாஸ்டியர் அலு வலகத்தில் சிபிஐ அதிகாரி கள் விசாரணை நடத்தி னார்கள். 

தடுப்பூசி மருந்து தயாரிப்பு, விநியோகம் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

ஆயினும் இதுவரை தேசிய ஒருங்கிணைந்த மருந்துத் திட்டத்தில் அளிக்கப்படும் முத்தடுப்பு, காசநோய், போலியோ மற்றும் தட்டம்மை தடுப்பூசி உற்பத்தி ஆகியவை எந்த பொதுத்துறை நிறுவனத் திற்கும் வழங்கப்படவில் லை என்பது குறிப்பிடத் தக்கது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, தனது தனியார்மயக் கொள்கையில் விலகாமல் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Monday, March 16, 2009

கிண்டி, குன்னூர், கசௌலியில் மீண்டும் நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

கிண்டி பிசிஜி, குன்னூர் பாஸ்டியர், கசௌலி மத்திய ஆராய்ச்சி கழகம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களிலும் மீண்டும் நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இவ்வியக்கத்தின் சார் பில் நாடு தழுவிய நோய் தடுப்பு திட்டத்தைக் காப்போம் என்ற தலைப்பில் சனிக்கிழமையன்று சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், இந்தியாவில் வருடத்திற்கு பிறக்கும் 2.6கோடி குழந் தைகளுக்கு பாதுகாப்பு கேடயமாக நாடு தழுவிய நோய்த் தடுப்புத் திட்டம் உள்ளது. நோய்த் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து (2008ஜன15) பிறப்பிக்கப்பட்ட உத்தர வை திரும்பப் பெற வேண்டும்.

இந்நிறுவனங்களில் பிசிஜி, டிபிடி, டிடி அண்டு டிடி ஆகிய மருந்துகளின் உற்பத்தியை உடனடியாக துவக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்படி இந் நிறுவனங்களை மேம் படுத்த உரிய நடவடிக்கை களை போர்க்கால அடிப் படையில் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவை யான நிதியை வழங்கி, நிபு ணர்களையும், ஆட்களை யும் நியமனம் செய்ய வேண்டும்.

இளம்பிள்ளை வாதம், தட்டம்மை தடுப்பு மருந்து நாடு தழுவிய நோய்தடுப்பு திட்டத்தின் ஒரு அங்கம். இத்தடுப்பு மருந்துகளையும் மேற்கண்ட நிறுவனங்க ளில் உற்பத்தி செய்ய வேண் டும் என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

டி.கே.ரங்கராஜன் எம்பி

இக்கருத்தரங்கில் பேசிய டி.கே.ரங்கராஜன் எம்பி, இந்த மூன்று நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி நிலையங் களையும் மூடக்கூடாது என்று பிரதமரிடம் மனுக் கொடுத்தேன். அதனடிப் படையில் சுகாதார அமைச் சகத்திடம் 13 கேள்விகளை பிரதமர் கேட்டார். பின்னர் நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு இப்பிரச்சனை அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து குன்னூரில் நிலைக்குழு ஆய்வு செய்துள்ளது என் றார்.

தனியார், மருத்துவத் திற்கு 6சதவீதம் செலவிடு தையும், அரசு ஒரு சதவீதம் செலவிடுதையும் குறிப் பிட்ட அவர், சாதாரண மனிதர்களுக்கு மருத்துவம் எட்டாக்கனியாக உள்ளது என்று 11வது ஐந்தாண்டு திட்டம் ஒப்புக் கொண் டுள்ளதையும் சுட்டிக்காட் டினார்.

கிண்டி பிசிஜி லேப் துவங்கப்பட்டபோது, அதனை எதிர்த்து ராஜாஜி பெரும் போராட்டம் நடத் தினார். ஆனால், அவர் தோல்வியடைந்தார். தற் போதுள்ள மத்திய அமைச் சர் ராஜாஜியின் கனவை நிறைவேற்றியுள்ளார். எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழிக்கும் பிரச் சனையில் மக்களை திரட்டி வலுவான போராட்டம் நடத்த வேண்டும் என்றும் ரங்கராஜன் கேட்டுக் கொண்டார்.

கே.மலைச்சாமி எம்பி

இந்திய மக்கள் நல அரசு என்ற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், குறைந்தபட்ச பொது செயல்திட்டம் என்ற கொள்கைக்கு மாறாகவும் மத்திய அரசு இந்த பொதுத் துறை நிறுவனங்களை மூடியுள்ளது என்று கூறிய அதிமுக மாநிலங்களவை கொறடா கே.மலைச்சாமி, அரசை நிர்பந்தப்படுத்தும் வகையில் நமது போராட் டம் அமைய வேண்டும் என்றார்.

டாக்டர் சி.ச.ரெக்ஸ் சற்குணம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங் கில் டாக்டர்கள் ஜேகப் ஜான், ஆர்.பிரபாகர், கே. பாலசுப்பிரமணி, சொக்க நாதன், பி.சந்திரா மற்றும் ஆர்.விஸ்வநாதன் (மருந்து பிரதிநிதிகள் சங்கம்) உள் ளிட்டோர் பேசினர். கே. வனஜகுமாரி நன்றி கூறி னார். முன்னதாக பா.கரு ணாநிதி வரவேற்று பேசினார்.

Friday, February 20, 2009

அன்புமணிக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டிஸ்

இந்திய நாட்டின் மூன்று பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்களின்
உரிமத்தை தற்காலிகமாக அன்புமனி ராமதாஸ் நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து பலபோராட்டங்கள் நாடு முழுவதும் இடதுசாரிகட்சிகள், மக்கள்நல்வாழ்வு இயக்கம். பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.

இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் யெச்சூரி, பிருந்தாகாராத், டி.கே ரங்கராஜன் ஆகியோர் கடுமையானமுறையில் அரசை எதிர்த்து பேசியுள்ளனர்.மேலும் பிரதமரை சந்தித்து மனு அளிக்கப்பட்டதன் காரணமாக பிரதமர் அலுவலகம் அன்புமணியை விளக்கம் கேட்டு உள்ளது.

இன்நிலையில் நேற்று தொடரப்பட்ட பொது நலன் வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் நீதிபதி சதாசிவம் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் படி மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி மற்றும் அந்த நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு விளக்கம்கேட்டு நோட்டிஸ் அனுப்பட்டுள்ளது.

Friday, January 23, 2009

போராட்டம் வெற்றி ! மூடப்பட்ட தடுப்பூசி மருந்து ஆலைகள் மீண்டும் திறக்கப்படும் தனியார் நிறுவனங்கள் ஏமாற்றியதால் மத்திய அரசு முடிவு

சென்னை, குன்னூர் மற்றும் கசவுலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவது என்ற முடிவை மத்திய அரசு மாற்றியுள்ளது. தனியார் நிறுவனங்களை நம்ப முடியாது என்ற நிலையில் தற்போது இம்மையங்களை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தின் சென்னை, குன்னூர் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் கசவுலி ஆகிய இடங்களில் இயங்கி வந்த தடுப்பூசி உற்பத்தி நிலையங்களை மூடுவது என மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், தொழிற்சங்கங்களும் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் புதுச்சேரி மக்கள் நல்வாழ்வு சபையும் நாடு முழுவதும் உள்ள அறிவியல் இயக்கங்ளும் மேற்கொண்ட கடுமையான போராட்டத்தின் காரணமாகவும் ,இம்முடிவினால் தனியார் தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் லாபமடையும் என்றும், சாதாரண ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டன.

ஆனால், இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல், உலக சுகாதார அமைப்பின் உற்பத்தி வரைமுறைகளுக்கு உள்ளிட்டு இம்மையங்களில் தடுப்பூசி உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவதற்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

ஆனால், நாடு முழுவதற்கும் தேவையான அளவு தடுப்பூசிகளை, குறைந்த செலவில் தனியார் நிறுவனங்களினால் வழங்கமுடியாது என்பதை அறிந்து, தற்போது மீண்டும் இந்த 3 நிலையங்களிலும் உற்பத்தியை தொடங்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.

கடந்த 3 காலாண்டுகளாக டிபிடி மற்றும் டிடி தடுப்பூசி மருந்துகளுக்கு இந்தியாவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குன்னூரிலுள்ள பாஸ்டியர் இன்ஸ்ட்டியூட் மற்றும் கசவுலியிலுள்ள மத்திய ஆய்வு நிறுவனம் ஆகியவற்றிற்கு இத்தடுப்பூசிகள் தயாரிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். விரைவில் இதற்கான உத்தரவு கடிதம் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

லாபமின்றி தடுப்பூசி மருந்துகள் குறைந்த விலையில் தருவதாக உறுதியளித்திருந்த தனியார் நிறுவனங்கள், பின்னர் தங்களது வாக்குறுதியை மீறி விலையை 40 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்தனர் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இதுதொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் செயலாளர் டாக்டர்.சுரீந்தர் சிங் தலைமையிலான நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையில், கசவுலி மையத்தை சின்னம்மை கண்காணிப்பு மையமாகவும், தடுப்பூசி மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்யும் வகையில் தேசிய ஆய்வகமாகவும் உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Monday, January 5, 2009

தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யும் சில தனியார் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி’’

டி.கே.ரங்கராஜன் எம்.பி. புகார் எதிரொலி  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் சரமாரி கேள்வி

தடுப்பூசி மருந்துகள் உற்பத்தியை நிறுத்தியது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அளித்த மனுவின் அடிப்படையில் பிரதமர் அலுவலகம், மத்தியசுகாதார அமைச்சகத்திற்கு கிடுக்கிப் பிடி போட்டுள்ளது.

நாட்டில் உள்ள மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்துவந்ததை மத்திய சுகாதார அமைச்சகம் ஓர் உத்தரவின் மூலம் திடீரென நிறுத்திவிட்டது. இவ்வாறு நிறுத்தியதன் பின்னணியில் “சந்தேகத்திற் கிடமான” நோக்கம் இருப்பதாகவும், அவை மீண்டும் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் டி.கே. ரங்கராஜன், பிரதமருக்கு ஒரு மனு அளித்திருந்தார். 

அதன் அடிப்படையில் பிரதமர் அலுவலகம், மத்திய சுகாதார அமைச்சகத்திடம் பல்வேறு விளக்கங்களைக் கோரியிருப்பதாக, ‘‘தி பயனீர்’’ நாளேடு திங்க ளன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருக்கும் விவரங்கள் வருமாறு:

மத்திய சுகாதார அமைச்சகம், தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்கள், மீண்டும் அவற்றைத் தொடர்ந்து உற்பத்தி செய் திட உரிய உத்தரவு எதுவும் வழங்காமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் அலு வலகம் கூர்ந்து கவனித்து வருகிறது. 

ஐமுகூ அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திற்கு எதி ராக, மத்திய சுகாதார அமைச்சகம் இவ்வாறு பொதுத்துறை நிறுவனங் கள் தடுப்பூசி உற்பத்தி செய்து வந்ததை நிறுத்தி விட்டதாக, பிரதமர் அலுவ லகம், மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் குறிப்பிட் டிருக்கிறது. 

2007 ஜனவரியில், மத்திய சுகாதார அமைச்சர் அன்பு மணி ராமதாஸ், தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்து வந்த குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட், சென்னை யில் உள்ள பிசிஜி தடுப்பூசி ஆய்வுக்கூடம் மற்றும் கவு சவுலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி மையம் ஆகிய வற்றின் செயல்பாடுகளை உலக சுகாதார ஸ்தாபனத் தின் குறிப்பு ஒன்றை மேற் கோள் காட்டி நிறுத்திவிட் டார். சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, உலக சுகாதார ஸ்தாபனம் மேற்படி பொதுத் துறை நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு வந்த மருந்துகளின் தரம் குறித்து அதிருப்தி தெரிவித்ததாம். ஆனால் அதே சமயத்தில் அதே உலக சுகாதார ஸ்தா பனம், மேற்படி பொதுத் துறை நிறுவனங்கள் மேற் படி தடுப்பூசி மருந்து களைத் தரமாக உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு மேம்படுத்துவதற்கான நட வடிக்கைகளை மேற்கொள் ளலாம் என்று பரிந்துரைத் திருப்பது குறித்து, மத்திய சுகாதார அமைச்சர் மவு னம் சாதித்து வருகிறார். சர் வதேசத் தர ஸ்தாபனத்தின் (ஐஎஸ்ஓ) 9002 தரச் சான்றி தழ் பெற்ற கவுரவமிக்க நிறுவனமான பாஸ்டியர் இன்ஸ்டிட்டியூட்டை மூட வேண்டியதற்கான காரணத் தைத் தெளிவாக்குமாறு மத்திய சுகாதார அமைச்ச கத்தை, பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இது தொடர்பாக, ‘தி பயனீர்’ நாளிதழ் நிருபரு டன் தொலைபேசி மூலம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், ‘‘தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய் யும் சில தனியார் நிறுவனங் களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி’’ என்றும், ‘‘ஐஎஸ்ஓ 9002 தரச் சான்றிதழ் பெற்ற ஒரு நிறு வனத்தை மூடுவதற்கான அவசியம் என்ன’’ என்றும் உலக சுகாதார ஸ்தாபனத் தின் பரிந்துரைகளின் மீதும் சந்தேகம் வருவதாகவும், வெளிநாடு மற்றும் நம் நாட் டில் உள்ள மருந்துக் கம்பெ னிகளின் கை, இத்தகைய பரிந்துரையின் பின்னால் இருப்பதாக சந்தேகப்படுவ தாகவும்’’ தெரிவித்தார்.

இந்தப்பின்னணியில்தான் மத்திய சுகாதார அமைச்சகத்திடம், பிரதமர் அலுவலகம்,

“இவ்வாறு பொதுத் துறை நிறுவனங்களை மூடியதன் பின்னர், தடுப்பூசி மருந்துகள் வாங்குவதற்காக செலவிடப்பட்டுள்ள கூடுதல் செலவினம் எவ்வளவு?” என்றும்.

“இந்த இடைப் பட்ட காலத்தில் தடுப்பூசி மருந்துகளைப் பெற்றிட என்ன ஏற்பாடு செய்யப்பட்டது” என்றும்.

“இவ்வாறான தடுப்பூசி மருந்துகள் நம் நாட்டில் உள்ள தனியார் மருந்துக் கம்பெனிகளிடமிருந்து வாங்கப்பட்டிருக் கிறதா?

அல்லது வெளிநாட் டிலிருந்து இறக்குமதி செய் யப்பட்டிருக்கிறதா?” என் றும் விளக்கம் கோரியுள்ளது.

மேலும்,
  • “அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரநிர்ணயத்திற்கு உட்படாத நாடுகளிலிருந்தும், மருந்துக் கம்பெனிகளிடமிருந்தும் பெறப்பட்டிருக்கிறதா?”

 என்றும் பிரதமர் அலுவலகம் கோரியுள்ளது. 

மேலும் நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங் கள் உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்பார்க்கும் தரத் தை அடைவதற்கான முறையில் மேம்படுத்திட, ஆகும் செலவினத்தின் விவரங்களைத் தெரிவிக்குமாறும் மத்திய சுகாதார அமைச்ச கத்தைக் பிரதமர் அலுவல கம் கேட்டுள்ளது. 

“மேற்படி பொதுத் துறை நிறுவனங்களை உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்பார்க்கும் தரத்தை அடைந்திட அரசுக்கு வெறும் 50 கோடி ரூபாய் தான் செலவாகும். ஆனால் அதைச் செய்வதை விடுத்து, அதைவிட பல மடங்கு ரூபாய் கொடுத்து, தனியார் நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசி மருந்துகளை வாங் கிக்கொண்டிருக்கிறது’’ என்று டி.கே.ரங்கராஜன் குற்றம்சாட்டினார்.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகத்திடம் 11 கேள்விகளை எழுப்பியுள்ள பிரதமர் அலுவலகம், தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்த பொதுத்துறை நிறுவனங்களை மூடிய செயலானது, ஐமுகூ அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி யுள்ளது. 

“ஐமுகூ அரசாங்கமானது உயிர்காக்கும் மருந்துகள் மக்களுக்கு மலிவு விலையில் கிடைப்பதற்கு உத்தரவாதம் செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ளும் என்று குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மருந்துகளின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வகைசெய்யும் விதத்தில் மேற்படி பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் புதுப்பிப்பதற்கான சாத்தி யக்கூறுகளை ஆராயு மாறும்’’ பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

நன்றி தீக்கதிர்