Wednesday, March 25, 2009

தடுப்பூசி நிறுவன விவகாரம் ஆய்வுக் குழு பரிந்துரை ஏற்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்

தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பாக ஆய்வுக் குழு வின் பரிந்துரைகளை ஏற்க மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 

தடுப்பூசி மருந்து ஆய் வக உற்பத்தி தொடர்பாக கடந்த மாதம் நாடாளு மன்ற நிலைக்குழுவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் கடிதம் எழுதியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறைக்கு 12 கேள்விகள் அடங்கிய கடிதத்தை பிரதமர் அலு வலகம் அனுப்பியிருந்தது. 

இந்நிலையில் கசவுளி, குன்னூர் மற்றும் சென்னையில் உள்ள ஆய்வக நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. 

இக்குழு தனது பரிந் துரையை மத்திய சுகாதாரத் துறையிடம் அளித்துவிட்டது. இப்பரிந்துரை அனைத்தையும் அமல் படுத்தப்படும் என கடந்த 13 ஆம் தேதியன்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது. அதற்கான திட் டங்களை அனுப்பவும் கோரியுள்ளது. 

இதனிடையே மார்ச் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் குன்னூர் பாஸ்டியர் அலு வலகத்தில் சிபிஐ அதிகாரி கள் விசாரணை நடத்தி னார்கள். 

தடுப்பூசி மருந்து தயாரிப்பு, விநியோகம் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

ஆயினும் இதுவரை தேசிய ஒருங்கிணைந்த மருந்துத் திட்டத்தில் அளிக்கப்படும் முத்தடுப்பு, காசநோய், போலியோ மற்றும் தட்டம்மை தடுப்பூசி உற்பத்தி ஆகியவை எந்த பொதுத்துறை நிறுவனத் திற்கும் வழங்கப்படவில் லை என்பது குறிப்பிடத் தக்கது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, தனது தனியார்மயக் கொள்கையில் விலகாமல் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Monday, March 16, 2009

கிண்டி, குன்னூர், கசௌலியில் மீண்டும் நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

கிண்டி பிசிஜி, குன்னூர் பாஸ்டியர், கசௌலி மத்திய ஆராய்ச்சி கழகம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களிலும் மீண்டும் நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இவ்வியக்கத்தின் சார் பில் நாடு தழுவிய நோய் தடுப்பு திட்டத்தைக் காப்போம் என்ற தலைப்பில் சனிக்கிழமையன்று சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், இந்தியாவில் வருடத்திற்கு பிறக்கும் 2.6கோடி குழந் தைகளுக்கு பாதுகாப்பு கேடயமாக நாடு தழுவிய நோய்த் தடுப்புத் திட்டம் உள்ளது. நோய்த் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து (2008ஜன15) பிறப்பிக்கப்பட்ட உத்தர வை திரும்பப் பெற வேண்டும்.

இந்நிறுவனங்களில் பிசிஜி, டிபிடி, டிடி அண்டு டிடி ஆகிய மருந்துகளின் உற்பத்தியை உடனடியாக துவக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்படி இந் நிறுவனங்களை மேம் படுத்த உரிய நடவடிக்கை களை போர்க்கால அடிப் படையில் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவை யான நிதியை வழங்கி, நிபு ணர்களையும், ஆட்களை யும் நியமனம் செய்ய வேண்டும்.

இளம்பிள்ளை வாதம், தட்டம்மை தடுப்பு மருந்து நாடு தழுவிய நோய்தடுப்பு திட்டத்தின் ஒரு அங்கம். இத்தடுப்பு மருந்துகளையும் மேற்கண்ட நிறுவனங்க ளில் உற்பத்தி செய்ய வேண் டும் என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

டி.கே.ரங்கராஜன் எம்பி

இக்கருத்தரங்கில் பேசிய டி.கே.ரங்கராஜன் எம்பி, இந்த மூன்று நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி நிலையங் களையும் மூடக்கூடாது என்று பிரதமரிடம் மனுக் கொடுத்தேன். அதனடிப் படையில் சுகாதார அமைச் சகத்திடம் 13 கேள்விகளை பிரதமர் கேட்டார். பின்னர் நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு இப்பிரச்சனை அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து குன்னூரில் நிலைக்குழு ஆய்வு செய்துள்ளது என் றார்.

தனியார், மருத்துவத் திற்கு 6சதவீதம் செலவிடு தையும், அரசு ஒரு சதவீதம் செலவிடுதையும் குறிப் பிட்ட அவர், சாதாரண மனிதர்களுக்கு மருத்துவம் எட்டாக்கனியாக உள்ளது என்று 11வது ஐந்தாண்டு திட்டம் ஒப்புக் கொண் டுள்ளதையும் சுட்டிக்காட் டினார்.

கிண்டி பிசிஜி லேப் துவங்கப்பட்டபோது, அதனை எதிர்த்து ராஜாஜி பெரும் போராட்டம் நடத் தினார். ஆனால், அவர் தோல்வியடைந்தார். தற் போதுள்ள மத்திய அமைச் சர் ராஜாஜியின் கனவை நிறைவேற்றியுள்ளார். எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழிக்கும் பிரச் சனையில் மக்களை திரட்டி வலுவான போராட்டம் நடத்த வேண்டும் என்றும் ரங்கராஜன் கேட்டுக் கொண்டார்.

கே.மலைச்சாமி எம்பி

இந்திய மக்கள் நல அரசு என்ற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், குறைந்தபட்ச பொது செயல்திட்டம் என்ற கொள்கைக்கு மாறாகவும் மத்திய அரசு இந்த பொதுத் துறை நிறுவனங்களை மூடியுள்ளது என்று கூறிய அதிமுக மாநிலங்களவை கொறடா கே.மலைச்சாமி, அரசை நிர்பந்தப்படுத்தும் வகையில் நமது போராட் டம் அமைய வேண்டும் என்றார்.

டாக்டர் சி.ச.ரெக்ஸ் சற்குணம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங் கில் டாக்டர்கள் ஜேகப் ஜான், ஆர்.பிரபாகர், கே. பாலசுப்பிரமணி, சொக்க நாதன், பி.சந்திரா மற்றும் ஆர்.விஸ்வநாதன் (மருந்து பிரதிநிதிகள் சங்கம்) உள் ளிட்டோர் பேசினர். கே. வனஜகுமாரி நன்றி கூறி னார். முன்னதாக பா.கரு ணாநிதி வரவேற்று பேசினார்.