Thursday, March 10, 2011

வலி நிவாரணி மருந்துகளால் லட்சம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு



வலி நிவாரணி மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் சிறு நீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உலக சிறுநீரக தினத்தையொட்டி பொதுமக்களுக்கு சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மருத்துவ கல்லூரியில் வியாழனன்று (மார்ச் 10) கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மருத்துவர்கள் இதனை தெரிவித்தனர். சிறுநீரக நோய் வருவதற்கு பல காரணம் இருந்தாலும் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் நோய் இதற்கு முக்கிய காரணம். மேலும் மக்களின் உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றால் இந்நோய் அதிகரிக்கிறது.

முறையான கவனிப்பின்றி சிறுநீரக நோய் முற்று மானால் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அல்லது மாற்று சிறுநீரகம் என்பதை தவிர வேறு வழியில்லை.

விபத்தில் இறந்தோரின் சிறுநீரகம், மூளை செயல் இழந்தவரின் சிறுநீரகத்தை இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பயன்படுத்தலாம். 2010ம் ஆண்டு மட்டும் 66 மாற்று சிறுநீரக சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.

எனவே, ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஆபத்தி லிருந்து தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த கருத்தரங்கில் தமிழக அரசின் மக்கள் நல் வாழ்வு செயலர் சுப்புராஜ், மருத்துவமனை இயக்குனர் வம்சதாரா, கல்லூரி முதல்வர் கனகசபை, பேராசிரி யர்கள் கோபாலகிருஷ்ணன், அமால், மெய்யப்பன் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.

No comments: