Monday, January 5, 2009

தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யும் சில தனியார் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி’’

டி.கே.ரங்கராஜன் எம்.பி. புகார் எதிரொலி  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் சரமாரி கேள்வி

தடுப்பூசி மருந்துகள் உற்பத்தியை நிறுத்தியது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அளித்த மனுவின் அடிப்படையில் பிரதமர் அலுவலகம், மத்தியசுகாதார அமைச்சகத்திற்கு கிடுக்கிப் பிடி போட்டுள்ளது.

நாட்டில் உள்ள மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்துவந்ததை மத்திய சுகாதார அமைச்சகம் ஓர் உத்தரவின் மூலம் திடீரென நிறுத்திவிட்டது. இவ்வாறு நிறுத்தியதன் பின்னணியில் “சந்தேகத்திற் கிடமான” நோக்கம் இருப்பதாகவும், அவை மீண்டும் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் டி.கே. ரங்கராஜன், பிரதமருக்கு ஒரு மனு அளித்திருந்தார். 

அதன் அடிப்படையில் பிரதமர் அலுவலகம், மத்திய சுகாதார அமைச்சகத்திடம் பல்வேறு விளக்கங்களைக் கோரியிருப்பதாக, ‘‘தி பயனீர்’’ நாளேடு திங்க ளன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருக்கும் விவரங்கள் வருமாறு:

மத்திய சுகாதார அமைச்சகம், தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்கள், மீண்டும் அவற்றைத் தொடர்ந்து உற்பத்தி செய் திட உரிய உத்தரவு எதுவும் வழங்காமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் அலு வலகம் கூர்ந்து கவனித்து வருகிறது. 

ஐமுகூ அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திற்கு எதி ராக, மத்திய சுகாதார அமைச்சகம் இவ்வாறு பொதுத்துறை நிறுவனங் கள் தடுப்பூசி உற்பத்தி செய்து வந்ததை நிறுத்தி விட்டதாக, பிரதமர் அலுவ லகம், மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் குறிப்பிட் டிருக்கிறது. 

2007 ஜனவரியில், மத்திய சுகாதார அமைச்சர் அன்பு மணி ராமதாஸ், தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்து வந்த குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட், சென்னை யில் உள்ள பிசிஜி தடுப்பூசி ஆய்வுக்கூடம் மற்றும் கவு சவுலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி மையம் ஆகிய வற்றின் செயல்பாடுகளை உலக சுகாதார ஸ்தாபனத் தின் குறிப்பு ஒன்றை மேற் கோள் காட்டி நிறுத்திவிட் டார். சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, உலக சுகாதார ஸ்தாபனம் மேற்படி பொதுத் துறை நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு வந்த மருந்துகளின் தரம் குறித்து அதிருப்தி தெரிவித்ததாம். ஆனால் அதே சமயத்தில் அதே உலக சுகாதார ஸ்தா பனம், மேற்படி பொதுத் துறை நிறுவனங்கள் மேற் படி தடுப்பூசி மருந்து களைத் தரமாக உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு மேம்படுத்துவதற்கான நட வடிக்கைகளை மேற்கொள் ளலாம் என்று பரிந்துரைத் திருப்பது குறித்து, மத்திய சுகாதார அமைச்சர் மவு னம் சாதித்து வருகிறார். சர் வதேசத் தர ஸ்தாபனத்தின் (ஐஎஸ்ஓ) 9002 தரச் சான்றி தழ் பெற்ற கவுரவமிக்க நிறுவனமான பாஸ்டியர் இன்ஸ்டிட்டியூட்டை மூட வேண்டியதற்கான காரணத் தைத் தெளிவாக்குமாறு மத்திய சுகாதார அமைச்ச கத்தை, பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இது தொடர்பாக, ‘தி பயனீர்’ நாளிதழ் நிருபரு டன் தொலைபேசி மூலம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், ‘‘தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய் யும் சில தனியார் நிறுவனங் களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி’’ என்றும், ‘‘ஐஎஸ்ஓ 9002 தரச் சான்றிதழ் பெற்ற ஒரு நிறு வனத்தை மூடுவதற்கான அவசியம் என்ன’’ என்றும் உலக சுகாதார ஸ்தாபனத் தின் பரிந்துரைகளின் மீதும் சந்தேகம் வருவதாகவும், வெளிநாடு மற்றும் நம் நாட் டில் உள்ள மருந்துக் கம்பெ னிகளின் கை, இத்தகைய பரிந்துரையின் பின்னால் இருப்பதாக சந்தேகப்படுவ தாகவும்’’ தெரிவித்தார்.

இந்தப்பின்னணியில்தான் மத்திய சுகாதார அமைச்சகத்திடம், பிரதமர் அலுவலகம்,

“இவ்வாறு பொதுத் துறை நிறுவனங்களை மூடியதன் பின்னர், தடுப்பூசி மருந்துகள் வாங்குவதற்காக செலவிடப்பட்டுள்ள கூடுதல் செலவினம் எவ்வளவு?” என்றும்.

“இந்த இடைப் பட்ட காலத்தில் தடுப்பூசி மருந்துகளைப் பெற்றிட என்ன ஏற்பாடு செய்யப்பட்டது” என்றும்.

“இவ்வாறான தடுப்பூசி மருந்துகள் நம் நாட்டில் உள்ள தனியார் மருந்துக் கம்பெனிகளிடமிருந்து வாங்கப்பட்டிருக் கிறதா?

அல்லது வெளிநாட் டிலிருந்து இறக்குமதி செய் யப்பட்டிருக்கிறதா?” என் றும் விளக்கம் கோரியுள்ளது.

மேலும்,
  • “அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரநிர்ணயத்திற்கு உட்படாத நாடுகளிலிருந்தும், மருந்துக் கம்பெனிகளிடமிருந்தும் பெறப்பட்டிருக்கிறதா?”

 என்றும் பிரதமர் அலுவலகம் கோரியுள்ளது. 

மேலும் நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங் கள் உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்பார்க்கும் தரத் தை அடைவதற்கான முறையில் மேம்படுத்திட, ஆகும் செலவினத்தின் விவரங்களைத் தெரிவிக்குமாறும் மத்திய சுகாதார அமைச்ச கத்தைக் பிரதமர் அலுவல கம் கேட்டுள்ளது. 

“மேற்படி பொதுத் துறை நிறுவனங்களை உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்பார்க்கும் தரத்தை அடைந்திட அரசுக்கு வெறும் 50 கோடி ரூபாய் தான் செலவாகும். ஆனால் அதைச் செய்வதை விடுத்து, அதைவிட பல மடங்கு ரூபாய் கொடுத்து, தனியார் நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசி மருந்துகளை வாங் கிக்கொண்டிருக்கிறது’’ என்று டி.கே.ரங்கராஜன் குற்றம்சாட்டினார்.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகத்திடம் 11 கேள்விகளை எழுப்பியுள்ள பிரதமர் அலுவலகம், தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்த பொதுத்துறை நிறுவனங்களை மூடிய செயலானது, ஐமுகூ அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி யுள்ளது. 

“ஐமுகூ அரசாங்கமானது உயிர்காக்கும் மருந்துகள் மக்களுக்கு மலிவு விலையில் கிடைப்பதற்கு உத்தரவாதம் செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ளும் என்று குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மருந்துகளின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வகைசெய்யும் விதத்தில் மேற்படி பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் புதுப்பிப்பதற்கான சாத்தி யக்கூறுகளை ஆராயு மாறும்’’ பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

நன்றி தீக்கதிர்

No comments: