இந்திய நாட்டின் மூன்று பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்களின்
உரிமத்தை தற்காலிகமாக அன்புமனி ராமதாஸ் நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து பலபோராட்டங்கள் நாடு முழுவதும் இடதுசாரிகட்சிகள், மக்கள்நல்வாழ்வு இயக்கம். பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.
இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் யெச்சூரி, பிருந்தாகாராத், டி.கே ரங்கராஜன் ஆகியோர் கடுமையானமுறையில் அரசை எதிர்த்து பேசியுள்ளனர்.மேலும் பிரதமரை சந்தித்து மனு அளிக்கப்பட்டதன் காரணமாக பிரதமர் அலுவலகம் அன்புமணியை விளக்கம் கேட்டு உள்ளது.
இன்நிலையில் நேற்று தொடரப்பட்ட பொது நலன் வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் நீதிபதி சதாசிவம் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் படி மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி மற்றும் அந்த நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு விளக்கம்கேட்டு நோட்டிஸ் அனுப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment