Friday, April 16, 2010

போலிமருந்து: உறுதியான நடவடிக்கை தேவை

தமிழகத்தில் காலாவதியான மருந்துகள் மறு சுழற்சி செய்யப்பட்டதும், விற்பனையில் முன்னணியில் இருக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்யப் பட்டு வருவதையும், கடந்த இரண்டு வாரங் களாக கண்டு வருகின்றோம்.

இதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங் களில் மருந்து கடைகளிலும், விசாரணை (ஆய்வு) மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் குப்பைகளில் காலாவதியான மருந் துகள் கண்டெடுப்பு, குப்பையில் மூட்டை மூட்டையாக போலி மருந்துகள் கொட்டப்பட் டிருந்தன என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இப்போது பூதாகரமாக விஷயம் கிளம்பி யிருப்பதால், இந்த பெரும் மோசடியில் தொடர்புடையவர்கள், நீதி விசாரணை என் றும், ஒட்டு மொத்தமாக இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டுமெனவும் என பல தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட் டுள்ளது.

சிறு பொறி பெரும் நெருப்பாய் மாறும் என்பதைப் போல், எங்கோ துவங்கி எப்படி யோ சென்று கொண்டிருக்கின்றது. இதையே சாதகமாக பயன்படுத்த பல பேர் முயன்று வருகின்றனர். சென்னையை மையமாக வைத்து காலாவதியான மருந்துகளை மறு சுழற்சி முறையில் விற்பனை செய்ததில் ஈடு பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள நபர் கள், கடந்த பல ஆண்டுகளாக மருந்து துறை யில் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள். இப் படிப்பட்ட மருந்துகளை விற்பதற்கென்றே 250 பிரதிநிதிகளை மாநிலம் முழுவதும் பணி யில் அமர்த்தியுள்ளனர். இதற்கென விசேஷ கிட்டங்கி/விற்பனை மையம் அமைத்துள்ள னர். இந்த விற்பனை ஏதோ ஓரிரு நாட்களாக நடந்தது அல்ல. திட்டமிட்ட முறையில் பல ஆண்டுகளாக செய்யப்பட்ட நடவடிக்கை. ஆனால் ஏதோ புதிதாக நடந்தது போல் அர சின் நடவடிக்கைகள் தெரிகின்றது. அதில் முதல் குற்றவாளியாக கருதப்படுபவர் ஏற்கெ னவே இரண்டு முறை கைது செய்யப்பட்டவர். முன்னர் கைது செய்யப்பட்டது போராட்டம் நடத்தியதற்காக அல்ல. மருந்து விற்பனை யில் செய்த குற்றத்திற்காகத்தான். அப்படிப் பட்டவர் மீது கண்காணிப்பே இல்லை. புதிதாக தொழில் (அ) நிறுவனம் துவங்கும் போது லைசென்ஸ் வழங்கப்படும். அப்படி வழங்கப் படும் போது, என்ன விற்பனை செய்யப் போகிறார்கள் என்பதை அரசின் சுகாதாரத் துறை ஆய்வு செய்ததா? செய்யத் தவறியுள் ளது என்பதை ஆணித்தரமாக கூறலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மறு சுழற்சியில் சிக்கியுள்ள பல மருந்துகள், முன் னணி நிறுவனங்களின் வேகமாக விற்பனை யாகும். அதாவது மருத்துவர்களால் அதிக மாக எழுதப்பட்ட மருந்துகள். இது போன்ற மருந்துகள் காலாவதியாக வாய்ப்பே இல் லை. எப்படி இது நடந்தது என்று அரசு தான் விளக்க வேண்டும்.

மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் தயாரிக்கப் பட்ட அனைத்து பொருட்களுக்கும் காப்பீடு செய்வது நடைமுறை. அதன்படி மருந்துகள் காலாவதியாகும் போது, மாசுக் கட்டுப்பாடு மற் றும் சுற்றுச்சூழல் துறைகளின் முன் அனுமதி பெற்று, அவர்கள் முன்னிலையில் காப்பீட்டுத் துறை ஆய்வாளர்கள் மத்தியில் அழிக்கப் படும். இந்த நடைமுறை பின்பற்றப்படுகின் றதா என்பது மிகப் பெரிய கேள்வி!

அப்படியென்றால் காலாவதியான மருந் துகள் எப்படி அழிக்கப்படுகின்றன என்பதை சுகாதாரத் துறையும் கண்டு கொள்ளவே யில்லை. என்ன செய்தார்கள் என்பதையும் அத்துறைக்கான அமைச்சரும் உயர் அதி காரிகளும் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும். மாறாக யாரோ குற்றவாளிகள் போல் இத்துறை அதிகாரிகள் கை நீட்டி கொண்டிருக்கிறார்கள்.

இப்படி காலாவதியான மருந்துகள் பிரச் சனைக்கு அதிகாரிகளும் காவல்துறையும் ஆய்வு செய்ய செல்லும் போது, மற்றொரு விஷயமும் கிளம்பியது. அதாவது போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை. ஏற் கெனவே விற்பனை செய்யப்படும் மருந்துக ளின் லேபிளையோ அல்லது மேல் அட்டை யையோ மாற்றி விற்பனை செய்து கொண் டிருப்பது தெரிய வந்தது.

இதுவும் இப்போது தெரிந்த விஷயமாக இருக்கவே முடியாது. அதிகாரிகளின் , அர சின் ஆசியோடு தான் இது நடந்திருக்க வேண்டும் என்பது குற்றச்சாட்டு. ஏனென் றால் பிடிபட்டது லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள (அதாவது விற்றால்) போலி மருந்து. அதை மருந்து என்றே சொல்லக்கூடாது. கட லூரில் துவங்கி கிழக்கு கடற்கரைச் சாலை வழி யாக அது எங்கெல்லாம் சென்றது என்பதை பற்றி இப்போது விசாரணை துவங்கியுள்ளது.

பெட்டிகளில் அடுக்கப்பட்டு, லாரிகளில் ஏற்றி அனுப்பப்படும் சரக்குகள் என்ன என் பது பற்றி யாருக்குமே தெரியவில்லை. பாவம் அப்பாவி மக்கள். கும்பகர்ணதூக்கம் இப் போது தான் கலைந்துள்ளது. முழுவதும் கலைந்துவிட்டது என்று அறுதியிட்டு சொல்லி விட முடியாது.

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

கோடி, கோடியாய் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது ஒரு புறம். உண் மையான மருந்து என நினைத்து, உட் கொண்டு உடல்நலமும், உடற்கூறின் முக் கிய பாகங்கள் பாதிக்கப்பட்டு தவித்து கொண் டிருப்பவர்கள் எண்ணற்றவர்கள். இது வெளிச்சத்திற்கு வரவில்லை.

உண்மைகளை வெளிக்கொண்டு வர விசாரணைகள் நடக்கின்றது. ஆனால் முடிவு வரும் போது அனைத்து விஷயங்களுமே காலாவதியாகி விடும் நிலை உருவாகிவிடும். விசாரணைகளின் வேகம் அப்படிப்பட்டது.

பல வழக்கு விசாரணைகளின் நிலை என்ன என்பதை நாடறியும். தவறு செய்த வன் சிரித்துக் கொண்டே நீதிமன்றங்களுக்கு செல்வதும், அரசின் நிதியும் இப்படி விரயமா வதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இந்த விஷயத்தில் அப்படி யாரும் இருந்து விடக் கூடாது.

இப்படி போலி மற்றும் காலாவதியான மருந்துகள் பிடிபடுவது ஒரு பக்கம் என்றால், எதுவும் கிடைக்கவில்லை என்பதற்காக போலி டாக்டர்களும் இப்போது பிடிபடுகின்றனர்.

இவர்கள் மருத்துவம் செய்வதோ, அல் லது ஆங்கில மருந்துகள்தான் கொடுக்கின் றனர் என்பதோ இப்போது தான் தெரிந்தது போல நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவர் கள் பிடிபடுவது இலவச இணைப்பு போல!

இதை விடக் பெரிய கூத்து என்னவென் றால், அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப் படும் மருந்துகளையும் தனியார் நிறுவனங் கள் தான் சப்ளை செய்கின்றன. அதெல்லாம் எந்த அளவுக்கு தரத்துடன் வருகின்றது என்பது இப்போது ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். காரணம், பொதுத்துறை நிறுவ னங்கள் இதுகாறும் மானிய விலையில் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வழங்கி வந்தது. நமது ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்தால் ( கொள்கையால்) அதுவும் இன்று நின்றுவிட்டது. எது எப்படியோ, பர பரப்பு அடங்கும் முன் முழுமையான, துரித மான விசாரணை நடைபெற வேண்டும் என் பது தான் விருப்பம். அரசு தன் பணியை அந்த வழியில் செயல்படுத்திட வேண்டும். அதற்காக துப்பு கொடுத்தால் 25 லட்சம் ரூபாய் பரிசு என்று ஏதோ காணாமல் போன வர்களை தேடுகின்றவர்கள் போல், திட்டம் அறிவிப்பது எல்லாம் கண்துடைப்பு. உருப் படியான உறுதியான நடவடிக்கையைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

No comments: