கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தின் முக்கிய செய்திகளில் ஒன்றாக இருக்கும் காலாவதியான மருந்துகள் மறுபயன்பாடு - மரணம் என, தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி யுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. ஒரு சிறுமியின் மரணம் (சென்னை) மூலம் இந்த கொலை பாதகச் செயல் உலகுக்கு தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகி லேயே அதிக லாபம் ஈட்டித் தரும் தொழில் களில் ஒன்று, மருந்து தயாரிப்பு விற்பனை. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெரும் நிறுவனங்கள் கூட சமீப காலமாக மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையில் இறங் கியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் தாராளமய - தனியார்மய கொள்கைகளாலும், மருந்து துறையில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு முடமாக்கப்பட்ட தாலும், பன்னாட்டு நிறுவனங்களின் படை யெடுப்பு, காப்புரிமை சட்ட திருத்தம் என வேகமான நடவடிக்கைகளால் மருந்து துறை யில் ஏராளமான நிறுவனங்கள் மற்றும் மருந் துகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இப்படி தாராளமாக கதவுகள் திறந்துவிடப் பட்டதன் ஒரு விளைவுதான், சென்னையில் நடந்திருக்கும் கோரம். இது ஒரு தனி நபரோ அல்லது சிலரால் மட்டுமே செய்யக்கூடிய காரியமல்ல. திட்டமிட்ட முறையில் மருந்துத் துறையில் பல ஆண்டுகளாக பரிச்சயம் பெற்றவர்கள்தான் இந்த மோசடியின் மூளை யாக இருந்திருக்கக்கூடும்.
சென்னையில் நடந்தது என்ன?
நமது மாநிலத்தின் தலைநகரில் உள்ள ஒரு குப்பை மேட்டில் டன் கணக்கில் மருந் துகள் (காலாவதியான) இருந்தது எனவும், அவை அங்கிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டு, கோயம்பேடு அருகில் உள்ள கிடங்கில் பிரிக் கப்பட்டு, புதியசீல் அச்சடிக்கப்பட்டு, மறு சுழற்சியில் மீண்டும் விற்பனைக்கு மருந்து கடைகளுக்கு வந்துள்ளன. இப்படி வந்ததில் பலவகை மருந்துகள் இருந்ததாகவும், உயி ருக்கு ஆபத்தான இம்மருந்துகள் உட்கொள் ளப்பட்டிருந்தால் பின் விளைவுகள் கற் பனைக்கு எட்டாதவை.
பொதுவாக எல்லா வகை மருந்துகளுக் கும் காலாவதியாகும் மாதமும் வருடமும் குறிப் பிடப்பட்டிருக்கும். அதற்கு மேல் அம்மருந் தின் தன்மை (நுககநஉவ) வலுவிழக்கும்; எதற் காக அதை பயன்படுத்துகிறோமோ அதன் கார ணம் நிறைவேறாது. இதில் ஒவ்வொரு வகை மருந்திற்கும் வெவ்வேறு குணாம்சங்கள் உண்டு. அப்படி பார்க்கையில், சிலவகை மருந்துகளை காலாவதியான பிறகு உட் கொண்டாலோ (அ) செலுத்தினாலோ (ஊசி வகைகள்) உடலின் முக்கிய பாகங்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும். இப்படி இருக் கையில், இந்த கும்பல் இதை வழிவகுக்கப் பட்ட செயல் வடிவத்தில் சந்தையில் செய் துள்ளது பெரும் கேள்விகளை எழுப்புகின்றது.
இதுமட்டுமா?
சென்னையில் நடைபெற்றுள்ள இந்த மோசடி, தனிப்பட்ட சம்பவம் அல்ல. பல ஆண்டுகளாக மருந்து துறையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுதான் வருகின்றது. கடந்த பத்து ஆண்டுகளாக இது போன்ற மோசடிகள் பல்வேறு வடிவங்களில் நடை பெற்று வருகின்றது என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணி அடிக் கப்பட்டது. குறிப்பாக மருத்துவ பிரதிநிதிக ளின் அகில இந்திய சம்மேளனம் (குஆசுஹஐ) ஆதாரப்பூர்வமான படங்களோடு செய்தி களை அந்த அமைப்பின் மாத இதழிலும், அரசுகளுக்கு கோரிக்கை மனுக்களாகவும் வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் நடவடிக்கை இல்லை. ஆனால் திடீரென்று விழித்துக்கொள்ளும் அரசு. சில நடவடிக்கை எடுப்பது, பின்னர் வசதியாக அதை கிடப்பில் போடுவது என் பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
காலாவதியாகும் மருந்துகளை மறுசுழற்சி யில் மீண்டும் விற்பனைக்கு விடுவதில் சில முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களே ஈடுபட்டதை நாடறியும். இது அம்பலப்பட்ட போது நிறுவனமே அதை தவறு என்று ஏற் றுக்கொண்டு, விற்பனையை தடை செய்தது. இப்படி சம்பவங்களின் வரிசையை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மருந்து துறையில் மருந்து தயாரிக்கும் நிறு வனம், நாடு முழுவதும் மொத்த விற்பனை யாளர்களை நியமித்து, அவர்கள் மூலம் மருந்து கடைகளுக்கு அனுப்புவதுதான் இன்று கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. இந்த நடைமுறையில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு, இடைத்தரகர்கள் மருந்து வணிகத் தில் ஈடுபடுவது புது சிக்கலை உருவாக்கி யுள்ளது. இவ்வாறு செயல்படும் இடைத்தரகர் கள் அதிக லாபம் வைத்து வர்த்தகத்தில் ஈடு படுவதால், மோசடிக் கும்பல்களின் எண் ணிக்கையும் அதிகரிக்க துவங்கியது. விளைவு, இன்று ஆலமரம் போல் இந்த விஷ சங்கிலித் தொடர் பரவியுள்ளது.
அரசு நடவடிக்கை
சென்னை சம்பவத்தை தொடர்ந்து முதல் வர் தலைமையில், சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் என கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அறிக்கைகளும் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அரசின் நடவடிக்கை சில வரவேற்கத்தக்கவை என்றாலும், ஒவ்வொரு விஷயத்திலும், தங்களுக்கு இதுவரையில் நடந்தது தெரியாது எனவும், இப்போது தெரிந் துவிட்டது. என்ன செய்கிறோம் பாருங்கள் என்பதை போல் தெரிகின்றது.
ஊசி முனையில் நடப்பது கூட அரசின் செவிகளுக்கு செல்லும் இக்காலத்தில், இது போன்ற மோசடிகள் தெரியாமல் இருந்தது என சொல்லிக்கொள்வது வடிகட்டியப்பொய்.
முதற்கட்டமாக, மருந்து கண்காணிப்பா ளர்களை கூடுதலாக நியமிக்கப்போகின் றோம் என்று அறிக்கை விட்டுள்ளது அரசு. 42,000 கடைகளுக்கு கூடுதலாக 420 பேரை மட் டும் நியமிப்பது பிரச்சனையை தீர்க்க உதவாது.
இரண்டாவதாக, காலாவதியான மருந்து கள் குப்பை மேட்டிற்கு எங்கிருந்து வந்தது. பொதுவாக, இப்படிப்பட்ட மருந்துகள் அழிக் கப்படவேண்டும். அப்படி செய்யப்படாமல் போனதற்கு காரணம் என்ன? எந்த கம்பெனி செய்யத்தவறியது? அழிப்பதற்கு முறையான வழிகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா?
மூன்றாவதாக, இந்த பிரச்சனை மக்க ளின் உயிரோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட்டு, உரிய முறையில் தண்டனை வழங்கப் படவேண்டும்.
இத்தோடு இந்தப்பிரச்சனையை முடித்து விடாமல், தமிழகம் முழுவதும் மருந்து விற் பனை மற்றும் தயாரிப்பு செய்யப்படும் இடங் களில் ஆய்வு நடத்தி தொடர்புடையவர்களை யும், தண்டனையின் எல்லைக்குள் கொண்டு வர வேண்டும்.
காலாவதியாகும் மருந்துகள் பட்டியல் முறையாக பராமரித்தல், அதை கண்காணிப் பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சரிபார்த்தல் என நடவடிக்கை தொடர வேண்டும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழு வதும் மருந்துத்துறையில் போதிய கண்கா ணிப்பு நடவடிக்கைகள் செய்வதில்லை. உற் பத்தி மற்றும் விற்பனைக்கு துவங்கும் போது வாங்கும் அனுமதி (லைசென்ஸ்) பெற்றால் போதும் அதன் பிறகு ஆயுளுக்கும் பிரச்ச னையே இல்லை.
சட்டங்கள் காகிதத்தில் மட்டும்
மக்கள் நலனில் அக்கறையோடு மத்திய- மாநில அரசுகள் மூலம் கொண்டு வரப்படும் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படுவ தில்லை. பலவீனங்களும், ஓட்டைகளும் இருப்பதால் சட்டம் இயற்றப்பட்ட இடத்தில் கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. காகிதத்தில் மட்டும் காலம் காலமாக இருக் கின்றது.
இதுபோன்ற மக்களின் நல்வாழ்வு சம்பந் தப்பட்ட பிரச்சனைகளில் அரசின் பணியே பிரதானமானது. சட்டங்கள் ஏட்டுச்சுரக்காயாக இல்லாமல் பின்பற்றிட வேண்டுமென பிடி வாதம் அரசுக்கு இருக்க வேண்டும். இந்தியா வில் மருந்து கொள்கை என்று பல ஆண்டு களுக்கு முன் உருவாக்கப்பட்டது. அப்படி கொள்கை உருவாக்கப்படுவதற்கு கூட பெரும்போராட்டங்கள் தேவைப்பட்டது. சமூக ஆர்வலர்கள், இடதுசாரி கட்சிகள், மருத்துவர் கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள், அறிவி யல் இயக்கம் என இதற்காக உழைத்திட்ட வர்கள் பலர். அப்படி வந்த சட்டத்தை முறை யாக பின்பற்ற உரிய நடவடிக்கை வேண்டும்.
லாப வேட்டைக்காக, தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவது ஒருபுற மிருக்க, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற் படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல் அரசு செயல்படு வதை தவிர்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாப வேட்டைக்காக அப்பாவி மக்களின் உயிரை காவு கொடுக்க திட்டமிட்ட சதிக்கும் பலுக்கு அரசு, நீதி மற்றும் காவல்துறை வளைந்து கொடுக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையும் தேவைப்படுகின்றது. மருந்து என்பது ஒரு அத்தியாவசிய பொருள். அதன் பயன்பாடு, பின்விளைவு என அனைத்தும் மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடி யது. அவர்களின் ஆலோசனையோடு மருந் துகளை எடுத்துக்கொள்வது, மருந்து வாங் கும்போது கவனமுடன் அனைத்து விஷயங் களையும் பார்ப்பது என சில விஷயங்களை நாமே செய்தலும் அவசியம்.
மருந்து அட்டைகளில், பாட்டில்களில் காலாவதியான வருடம்/மாதம் என இனி மேல் பெரிதாக அச்சடிக்கப்படவேண்டும். இவையனைத்தும் காலத்தின் தேவை. முறையாக அமல்படுத்தப்படுவது கட்டாயம். அப்படி செய்தால் மட்டுமே விலைமதிப்பற்ற மனித உயிர்களை, லாபவெறி பிடித்தவர் களிடமிருந்து காப்பாற்ற முடியும்.
என்.சிவகுரு
Sunday, March 28, 2010
போலி மருந்து; பரந்த வலைப்பின்னல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment