நாடு விடுதலையடைந்து 64வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போதும், ஏழை-எளிய உழைக்கும் மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் காங்கிரஸ் தலைமையிலான அரசோ, இந்திய முதலாளித்துவ கட்டமைப்போ கொண்டுவர முடியவில்லை என்று மேற்குவங்க திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் வி. கே. ராமச்சந்திரன் குற்றம்சாட்டினார். |
Monday, August 30, 2010
கோடிக்கணக்கில் பசித்த வயிறுகள்; கோடிகளில் புரளும் பெரும் பணக்காரர்கள் பொருளாதார நிபுணர் வி.கே.ராமச்சந்திரன் குமுறல்
Friday, April 16, 2010
போலிமருந்து: உறுதியான நடவடிக்கை தேவை
தமிழகத்தில் காலாவதியான மருந்துகள் மறு சுழற்சி செய்யப்பட்டதும், விற்பனையில் முன்னணியில் இருக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்யப் பட்டு வருவதையும், கடந்த இரண்டு வாரங் களாக கண்டு வருகின்றோம்.
இதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங் களில் மருந்து கடைகளிலும், விசாரணை (ஆய்வு) மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் குப்பைகளில் காலாவதியான மருந் துகள் கண்டெடுப்பு, குப்பையில் மூட்டை மூட்டையாக போலி மருந்துகள் கொட்டப்பட் டிருந்தன என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
இப்போது பூதாகரமாக விஷயம் கிளம்பி யிருப்பதால், இந்த பெரும் மோசடியில் தொடர்புடையவர்கள், நீதி விசாரணை என் றும், ஒட்டு மொத்தமாக இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டுமெனவும் என பல தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட் டுள்ளது.
சிறு பொறி பெரும் நெருப்பாய் மாறும் என்பதைப் போல், எங்கோ துவங்கி எப்படி யோ சென்று கொண்டிருக்கின்றது. இதையே சாதகமாக பயன்படுத்த பல பேர் முயன்று வருகின்றனர். சென்னையை மையமாக வைத்து காலாவதியான மருந்துகளை மறு சுழற்சி முறையில் விற்பனை செய்ததில் ஈடு பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள நபர் கள், கடந்த பல ஆண்டுகளாக மருந்து துறை யில் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள். இப் படிப்பட்ட மருந்துகளை விற்பதற்கென்றே 250 பிரதிநிதிகளை மாநிலம் முழுவதும் பணி யில் அமர்த்தியுள்ளனர். இதற்கென விசேஷ கிட்டங்கி/விற்பனை மையம் அமைத்துள்ள னர். இந்த விற்பனை ஏதோ ஓரிரு நாட்களாக நடந்தது அல்ல. திட்டமிட்ட முறையில் பல ஆண்டுகளாக செய்யப்பட்ட நடவடிக்கை. ஆனால் ஏதோ புதிதாக நடந்தது போல் அர சின் நடவடிக்கைகள் தெரிகின்றது. அதில் முதல் குற்றவாளியாக கருதப்படுபவர் ஏற்கெ னவே இரண்டு முறை கைது செய்யப்பட்டவர். முன்னர் கைது செய்யப்பட்டது போராட்டம் நடத்தியதற்காக அல்ல. மருந்து விற்பனை யில் செய்த குற்றத்திற்காகத்தான். அப்படிப் பட்டவர் மீது கண்காணிப்பே இல்லை. புதிதாக தொழில் (அ) நிறுவனம் துவங்கும் போது லைசென்ஸ் வழங்கப்படும். அப்படி வழங்கப் படும் போது, என்ன விற்பனை செய்யப் போகிறார்கள் என்பதை அரசின் சுகாதாரத் துறை ஆய்வு செய்ததா? செய்யத் தவறியுள் ளது என்பதை ஆணித்தரமாக கூறலாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், மறு சுழற்சியில் சிக்கியுள்ள பல மருந்துகள், முன் னணி நிறுவனங்களின் வேகமாக விற்பனை யாகும். அதாவது மருத்துவர்களால் அதிக மாக எழுதப்பட்ட மருந்துகள். இது போன்ற மருந்துகள் காலாவதியாக வாய்ப்பே இல் லை. எப்படி இது நடந்தது என்று அரசு தான் விளக்க வேண்டும்.
மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் தயாரிக்கப் பட்ட அனைத்து பொருட்களுக்கும் காப்பீடு செய்வது நடைமுறை. அதன்படி மருந்துகள் காலாவதியாகும் போது, மாசுக் கட்டுப்பாடு மற் றும் சுற்றுச்சூழல் துறைகளின் முன் அனுமதி பெற்று, அவர்கள் முன்னிலையில் காப்பீட்டுத் துறை ஆய்வாளர்கள் மத்தியில் அழிக்கப் படும். இந்த நடைமுறை பின்பற்றப்படுகின் றதா என்பது மிகப் பெரிய கேள்வி!
அப்படியென்றால் காலாவதியான மருந் துகள் எப்படி அழிக்கப்படுகின்றன என்பதை சுகாதாரத் துறையும் கண்டு கொள்ளவே யில்லை. என்ன செய்தார்கள் என்பதையும் அத்துறைக்கான அமைச்சரும் உயர் அதி காரிகளும் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும். மாறாக யாரோ குற்றவாளிகள் போல் இத்துறை அதிகாரிகள் கை நீட்டி கொண்டிருக்கிறார்கள்.
இப்படி காலாவதியான மருந்துகள் பிரச் சனைக்கு அதிகாரிகளும் காவல்துறையும் ஆய்வு செய்ய செல்லும் போது, மற்றொரு விஷயமும் கிளம்பியது. அதாவது போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை. ஏற் கெனவே விற்பனை செய்யப்படும் மருந்துக ளின் லேபிளையோ அல்லது மேல் அட்டை யையோ மாற்றி விற்பனை செய்து கொண் டிருப்பது தெரிய வந்தது.
இதுவும் இப்போது தெரிந்த விஷயமாக இருக்கவே முடியாது. அதிகாரிகளின் , அர சின் ஆசியோடு தான் இது நடந்திருக்க வேண்டும் என்பது குற்றச்சாட்டு. ஏனென் றால் பிடிபட்டது லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள (அதாவது விற்றால்) போலி மருந்து. அதை மருந்து என்றே சொல்லக்கூடாது. கட லூரில் துவங்கி கிழக்கு கடற்கரைச் சாலை வழி யாக அது எங்கெல்லாம் சென்றது என்பதை பற்றி இப்போது விசாரணை துவங்கியுள்ளது.
பெட்டிகளில் அடுக்கப்பட்டு, லாரிகளில் ஏற்றி அனுப்பப்படும் சரக்குகள் என்ன என் பது பற்றி யாருக்குமே தெரியவில்லை. பாவம் அப்பாவி மக்கள். கும்பகர்ணதூக்கம் இப் போது தான் கலைந்துள்ளது. முழுவதும் கலைந்துவிட்டது என்று அறுதியிட்டு சொல்லி விட முடியாது.
சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
கோடி, கோடியாய் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது ஒரு புறம். உண் மையான மருந்து என நினைத்து, உட் கொண்டு உடல்நலமும், உடற்கூறின் முக் கிய பாகங்கள் பாதிக்கப்பட்டு தவித்து கொண் டிருப்பவர்கள் எண்ணற்றவர்கள். இது வெளிச்சத்திற்கு வரவில்லை.
உண்மைகளை வெளிக்கொண்டு வர விசாரணைகள் நடக்கின்றது. ஆனால் முடிவு வரும் போது அனைத்து விஷயங்களுமே காலாவதியாகி விடும் நிலை உருவாகிவிடும். விசாரணைகளின் வேகம் அப்படிப்பட்டது.
பல வழக்கு விசாரணைகளின் நிலை என்ன என்பதை நாடறியும். தவறு செய்த வன் சிரித்துக் கொண்டே நீதிமன்றங்களுக்கு செல்வதும், அரசின் நிதியும் இப்படி விரயமா வதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இந்த விஷயத்தில் அப்படி யாரும் இருந்து விடக் கூடாது.
இப்படி போலி மற்றும் காலாவதியான மருந்துகள் பிடிபடுவது ஒரு பக்கம் என்றால், எதுவும் கிடைக்கவில்லை என்பதற்காக போலி டாக்டர்களும் இப்போது பிடிபடுகின்றனர்.
இவர்கள் மருத்துவம் செய்வதோ, அல் லது ஆங்கில மருந்துகள்தான் கொடுக்கின் றனர் என்பதோ இப்போது தான் தெரிந்தது போல நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவர் கள் பிடிபடுவது இலவச இணைப்பு போல!
இதை விடக் பெரிய கூத்து என்னவென் றால், அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப் படும் மருந்துகளையும் தனியார் நிறுவனங் கள் தான் சப்ளை செய்கின்றன. அதெல்லாம் எந்த அளவுக்கு தரத்துடன் வருகின்றது என்பது இப்போது ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். காரணம், பொதுத்துறை நிறுவ னங்கள் இதுகாறும் மானிய விலையில் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வழங்கி வந்தது. நமது ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்தால் ( கொள்கையால்) அதுவும் இன்று நின்றுவிட்டது. எது எப்படியோ, பர பரப்பு அடங்கும் முன் முழுமையான, துரித மான விசாரணை நடைபெற வேண்டும் என் பது தான் விருப்பம். அரசு தன் பணியை அந்த வழியில் செயல்படுத்திட வேண்டும். அதற்காக துப்பு கொடுத்தால் 25 லட்சம் ரூபாய் பரிசு என்று ஏதோ காணாமல் போன வர்களை தேடுகின்றவர்கள் போல், திட்டம் அறிவிப்பது எல்லாம் கண்துடைப்பு. உருப் படியான உறுதியான நடவடிக்கையைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Sunday, March 28, 2010
போலி மருந்து; பரந்த வலைப்பின்னல்
கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தின் முக்கிய செய்திகளில் ஒன்றாக இருக்கும் காலாவதியான மருந்துகள் மறுபயன்பாடு - மரணம் என, தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி யுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. ஒரு சிறுமியின் மரணம் (சென்னை) மூலம் இந்த கொலை பாதகச் செயல் உலகுக்கு தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகி லேயே அதிக லாபம் ஈட்டித் தரும் தொழில் களில் ஒன்று, மருந்து தயாரிப்பு விற்பனை. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெரும் நிறுவனங்கள் கூட சமீப காலமாக மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையில் இறங் கியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் தாராளமய - தனியார்மய கொள்கைகளாலும், மருந்து துறையில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு முடமாக்கப்பட்ட தாலும், பன்னாட்டு நிறுவனங்களின் படை யெடுப்பு, காப்புரிமை சட்ட திருத்தம் என வேகமான நடவடிக்கைகளால் மருந்து துறை யில் ஏராளமான நிறுவனங்கள் மற்றும் மருந் துகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இப்படி தாராளமாக கதவுகள் திறந்துவிடப் பட்டதன் ஒரு விளைவுதான், சென்னையில் நடந்திருக்கும் கோரம். இது ஒரு தனி நபரோ அல்லது சிலரால் மட்டுமே செய்யக்கூடிய காரியமல்ல. திட்டமிட்ட முறையில் மருந்துத் துறையில் பல ஆண்டுகளாக பரிச்சயம் பெற்றவர்கள்தான் இந்த மோசடியின் மூளை யாக இருந்திருக்கக்கூடும்.
சென்னையில் நடந்தது என்ன?
நமது மாநிலத்தின் தலைநகரில் உள்ள ஒரு குப்பை மேட்டில் டன் கணக்கில் மருந் துகள் (காலாவதியான) இருந்தது எனவும், அவை அங்கிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டு, கோயம்பேடு அருகில் உள்ள கிடங்கில் பிரிக் கப்பட்டு, புதியசீல் அச்சடிக்கப்பட்டு, மறு சுழற்சியில் மீண்டும் விற்பனைக்கு மருந்து கடைகளுக்கு வந்துள்ளன. இப்படி வந்ததில் பலவகை மருந்துகள் இருந்ததாகவும், உயி ருக்கு ஆபத்தான இம்மருந்துகள் உட்கொள் ளப்பட்டிருந்தால் பின் விளைவுகள் கற் பனைக்கு எட்டாதவை.
பொதுவாக எல்லா வகை மருந்துகளுக் கும் காலாவதியாகும் மாதமும் வருடமும் குறிப் பிடப்பட்டிருக்கும். அதற்கு மேல் அம்மருந் தின் தன்மை (நுககநஉவ) வலுவிழக்கும்; எதற் காக அதை பயன்படுத்துகிறோமோ அதன் கார ணம் நிறைவேறாது. இதில் ஒவ்வொரு வகை மருந்திற்கும் வெவ்வேறு குணாம்சங்கள் உண்டு. அப்படி பார்க்கையில், சிலவகை மருந்துகளை காலாவதியான பிறகு உட் கொண்டாலோ (அ) செலுத்தினாலோ (ஊசி வகைகள்) உடலின் முக்கிய பாகங்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும். இப்படி இருக் கையில், இந்த கும்பல் இதை வழிவகுக்கப் பட்ட செயல் வடிவத்தில் சந்தையில் செய் துள்ளது பெரும் கேள்விகளை எழுப்புகின்றது.
இதுமட்டுமா?
சென்னையில் நடைபெற்றுள்ள இந்த மோசடி, தனிப்பட்ட சம்பவம் அல்ல. பல ஆண்டுகளாக மருந்து துறையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுதான் வருகின்றது. கடந்த பத்து ஆண்டுகளாக இது போன்ற மோசடிகள் பல்வேறு வடிவங்களில் நடை பெற்று வருகின்றது என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணி அடிக் கப்பட்டது. குறிப்பாக மருத்துவ பிரதிநிதிக ளின் அகில இந்திய சம்மேளனம் (குஆசுஹஐ) ஆதாரப்பூர்வமான படங்களோடு செய்தி களை அந்த அமைப்பின் மாத இதழிலும், அரசுகளுக்கு கோரிக்கை மனுக்களாகவும் வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் நடவடிக்கை இல்லை. ஆனால் திடீரென்று விழித்துக்கொள்ளும் அரசு. சில நடவடிக்கை எடுப்பது, பின்னர் வசதியாக அதை கிடப்பில் போடுவது என் பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
காலாவதியாகும் மருந்துகளை மறுசுழற்சி யில் மீண்டும் விற்பனைக்கு விடுவதில் சில முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களே ஈடுபட்டதை நாடறியும். இது அம்பலப்பட்ட போது நிறுவனமே அதை தவறு என்று ஏற் றுக்கொண்டு, விற்பனையை தடை செய்தது. இப்படி சம்பவங்களின் வரிசையை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மருந்து துறையில் மருந்து தயாரிக்கும் நிறு வனம், நாடு முழுவதும் மொத்த விற்பனை யாளர்களை நியமித்து, அவர்கள் மூலம் மருந்து கடைகளுக்கு அனுப்புவதுதான் இன்று கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. இந்த நடைமுறையில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு, இடைத்தரகர்கள் மருந்து வணிகத் தில் ஈடுபடுவது புது சிக்கலை உருவாக்கி யுள்ளது. இவ்வாறு செயல்படும் இடைத்தரகர் கள் அதிக லாபம் வைத்து வர்த்தகத்தில் ஈடு படுவதால், மோசடிக் கும்பல்களின் எண் ணிக்கையும் அதிகரிக்க துவங்கியது. விளைவு, இன்று ஆலமரம் போல் இந்த விஷ சங்கிலித் தொடர் பரவியுள்ளது.
அரசு நடவடிக்கை
சென்னை சம்பவத்தை தொடர்ந்து முதல் வர் தலைமையில், சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் என கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அறிக்கைகளும் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அரசின் நடவடிக்கை சில வரவேற்கத்தக்கவை என்றாலும், ஒவ்வொரு விஷயத்திலும், தங்களுக்கு இதுவரையில் நடந்தது தெரியாது எனவும், இப்போது தெரிந் துவிட்டது. என்ன செய்கிறோம் பாருங்கள் என்பதை போல் தெரிகின்றது.
ஊசி முனையில் நடப்பது கூட அரசின் செவிகளுக்கு செல்லும் இக்காலத்தில், இது போன்ற மோசடிகள் தெரியாமல் இருந்தது என சொல்லிக்கொள்வது வடிகட்டியப்பொய்.
முதற்கட்டமாக, மருந்து கண்காணிப்பா ளர்களை கூடுதலாக நியமிக்கப்போகின் றோம் என்று அறிக்கை விட்டுள்ளது அரசு. 42,000 கடைகளுக்கு கூடுதலாக 420 பேரை மட் டும் நியமிப்பது பிரச்சனையை தீர்க்க உதவாது.
இரண்டாவதாக, காலாவதியான மருந்து கள் குப்பை மேட்டிற்கு எங்கிருந்து வந்தது. பொதுவாக, இப்படிப்பட்ட மருந்துகள் அழிக் கப்படவேண்டும். அப்படி செய்யப்படாமல் போனதற்கு காரணம் என்ன? எந்த கம்பெனி செய்யத்தவறியது? அழிப்பதற்கு முறையான வழிகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா?
மூன்றாவதாக, இந்த பிரச்சனை மக்க ளின் உயிரோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட்டு, உரிய முறையில் தண்டனை வழங்கப் படவேண்டும்.
இத்தோடு இந்தப்பிரச்சனையை முடித்து விடாமல், தமிழகம் முழுவதும் மருந்து விற் பனை மற்றும் தயாரிப்பு செய்யப்படும் இடங் களில் ஆய்வு நடத்தி தொடர்புடையவர்களை யும், தண்டனையின் எல்லைக்குள் கொண்டு வர வேண்டும்.
காலாவதியாகும் மருந்துகள் பட்டியல் முறையாக பராமரித்தல், அதை கண்காணிப் பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சரிபார்த்தல் என நடவடிக்கை தொடர வேண்டும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழு வதும் மருந்துத்துறையில் போதிய கண்கா ணிப்பு நடவடிக்கைகள் செய்வதில்லை. உற் பத்தி மற்றும் விற்பனைக்கு துவங்கும் போது வாங்கும் அனுமதி (லைசென்ஸ்) பெற்றால் போதும் அதன் பிறகு ஆயுளுக்கும் பிரச்ச னையே இல்லை.
சட்டங்கள் காகிதத்தில் மட்டும்
மக்கள் நலனில் அக்கறையோடு மத்திய- மாநில அரசுகள் மூலம் கொண்டு வரப்படும் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படுவ தில்லை. பலவீனங்களும், ஓட்டைகளும் இருப்பதால் சட்டம் இயற்றப்பட்ட இடத்தில் கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. காகிதத்தில் மட்டும் காலம் காலமாக இருக் கின்றது.
இதுபோன்ற மக்களின் நல்வாழ்வு சம்பந் தப்பட்ட பிரச்சனைகளில் அரசின் பணியே பிரதானமானது. சட்டங்கள் ஏட்டுச்சுரக்காயாக இல்லாமல் பின்பற்றிட வேண்டுமென பிடி வாதம் அரசுக்கு இருக்க வேண்டும். இந்தியா வில் மருந்து கொள்கை என்று பல ஆண்டு களுக்கு முன் உருவாக்கப்பட்டது. அப்படி கொள்கை உருவாக்கப்படுவதற்கு கூட பெரும்போராட்டங்கள் தேவைப்பட்டது. சமூக ஆர்வலர்கள், இடதுசாரி கட்சிகள், மருத்துவர் கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள், அறிவி யல் இயக்கம் என இதற்காக உழைத்திட்ட வர்கள் பலர். அப்படி வந்த சட்டத்தை முறை யாக பின்பற்ற உரிய நடவடிக்கை வேண்டும்.
லாப வேட்டைக்காக, தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவது ஒருபுற மிருக்க, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற் படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல் அரசு செயல்படு வதை தவிர்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாப வேட்டைக்காக அப்பாவி மக்களின் உயிரை காவு கொடுக்க திட்டமிட்ட சதிக்கும் பலுக்கு அரசு, நீதி மற்றும் காவல்துறை வளைந்து கொடுக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையும் தேவைப்படுகின்றது. மருந்து என்பது ஒரு அத்தியாவசிய பொருள். அதன் பயன்பாடு, பின்விளைவு என அனைத்தும் மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடி யது. அவர்களின் ஆலோசனையோடு மருந் துகளை எடுத்துக்கொள்வது, மருந்து வாங் கும்போது கவனமுடன் அனைத்து விஷயங் களையும் பார்ப்பது என சில விஷயங்களை நாமே செய்தலும் அவசியம்.
மருந்து அட்டைகளில், பாட்டில்களில் காலாவதியான வருடம்/மாதம் என இனி மேல் பெரிதாக அச்சடிக்கப்படவேண்டும். இவையனைத்தும் காலத்தின் தேவை. முறையாக அமல்படுத்தப்படுவது கட்டாயம். அப்படி செய்தால் மட்டுமே விலைமதிப்பற்ற மனித உயிர்களை, லாபவெறி பிடித்தவர் களிடமிருந்து காப்பாற்ற முடியும்.
என்.சிவகுரு
Saturday, February 27, 2010
இந்த நூற்றாண்டின் மகா மருத்துவ ஊழல்
எச்1என்1. இன்ப்ளூயன்சா (பன்றிக்காய்ச்சல்) தடுப்பு ஊசி யை உறுப்பினர் நாடுகளுக்கு பரிந்துரைத்த விஷயத்தில் சர்வ தேச சுகாதார கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டதா? என் பதை உலக சுகாதார நிறுவனம் மறு ஆய்வு செய்யவுள்ளதாக ஜனவரி 15ல் அறிவித்துள்ளது.
டென்மார்க் நாட்டை சேர்ந்த, ‘இன்பர்மேஷன்’ நாளிதழில், உலக சுகாதார நிறுவனத்தில் சுகாதார நிபுணர்கள் மருந்து உற் பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவ னத்தில் சம்பளம் வாங்குபவர்க ளாக உள்ளனர். இந்த ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிகளை பரிந்துரை செய் யும் நிபுணர் குழுவில், புதிய உறுப் பினராக ஜீகாரி எஸ்கோலா இடம்பெற்றுள்ளார். இந்த நிபு ணர், பின்னிஷ் இன்ஸ்டிடியூட் டில் இயக்குனராக உள்ளார்.
இந்த நிறுவனம் எச்1என்1 தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் கிளாக்சோ ஸ்மித் க்ளின் நிறுவனத்திடம் ஆராய்ச்சி மானியமாக 60லட்சம் யூரோ கரன்சியை பெற்றுள்ளது. மருந்து நிறுவனத்திடம் இருந்து மானியம் பெற்ற நிறுவன இயக்குனரான எஸ்கோலா, உலக நாடுகள், எச்1என்1 தடுப்பூசி வாங்குவதில் முனைப்பு காட்டியுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பன்னாட்டு மருந்து நிறுவன தயாரிப்பை சந்தையில், கூடுத லாக விற்பனை செய்வதற்கு உலக சுகாதார நிறுவனம் துணை போகிறதா என்ற விமர்சனத்தை பல நாடுகள் எழுப்பியுள்ளன.
நிபுணர் எஸ்கோலா, இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கையில், எனது நிறுவனத் தின் தலைவருக்கும், க்ளாக்சோ ஸ்மித்கிளின் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை பொதுமக் களிடம் கூறவில்லை. குறிப் பிட்ட ஆய்வுக்கு, பெறப்பட்ட பணம் தொடர்புடைய ஆய்வுகுழு வில் நான் (எஸ்கோலோ) இல் லை என்றும் தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின் சமீப செயற்குழு கூட்டம் ஜெனீ வாவில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் பங்கேற்ற இந்திய சுகா தாரத்துறை செயலாளர் சுஜாதா ராவ், பேசுகையில், ஸ்வைன் ப்ளூ தவறான பேரிடர் நோய் என்று, ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. பல நாடுகளில், பெரும் மக்களிடம் இந்த நோய் பரவியது உண்மையா? என கேட்டார்.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் பதிலளிக்கையில், அனைத்து உறுப்பினர் நாடுக ளுக்கும் எச்1என்1 பேரிடர் நோயின் உண்மையான நிலை குறித்து முறைப்படியாக கடிதம் அனுப்புவதாக தெரிவித்தது.
கடந்த ஜனவரி மாத இறுதி யில் ஐரோப்பா நாடாளுமன்ற அவைக்குழுவின் அவசர கூட் டம் பிரான்சில் நடைபெற்றது. எச்1என்1 குறித்து நிறுவனம் பிரச்சாரம் மேற்கொண்ட நிலை யில், இந்நோய்க்கான மருந்து உற் பத்தியாளர்கள் தங்களது ஆதிக் கத்தை செலுத்தினார்களா என் பது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஐரோப்பா நாடாளுமன்ற அவைக் குழுவின், சுகாதார பிரிவு தலைவர் வூல்ப் காங்வொடார்க், ப்ளூ பேரிடர் நோய் இந்த நூற்றாண்டின் பெரும் மருத்துவ ஊழல் என்றார். எச்1என்1 வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்திற்காக ஜி.எஸ்.கே. நிறுவனம் இந்தியாவிலும் சோத னை செய்து வருகிறது. இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டின் கூடு தல் மருத்துவ இயக்குனர் பிரசாத் குல்கர்னி கூறுகையில், உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் இந்த தடுப்பு மருந்து வருகிற மார்ச் மாதகாலகட்டத்தில் கிடைக்கும் என்றார்.
-எஸ்.பிரேம்குமார்
ஆதாரம் : டவுன் டூ எர்த்
Saturday, January 2, 2010
மருந்து நிறுவனங்களின் பரிசுகளை வாங்கக்கூடாது மருத்துவர்களுக்கு புதிய தடை
தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில், மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களைச் சந்தித்து பரிசுப் பொருட்கள் வழங்கி வருவ தாக தொடர்ந்து குற்றச் சாட்டு எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தற்போது இந்திய மருத்துவக்கழகம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி உத்தரவிட் டுள்ளது.
மருத்துவக்கழகத்தின் புதிய பணிவரன்முறை விதி முறைகளின்படி, இனி மேல், மருந்து நிறுவனங்கள் வழங்கும் பரிசுப் பொருட்களை மருத்துவர்கள் ஏற்கக் கூடாது. மேலும் மருந்து நிறுவனங்கள் அழைத்துச் செல்லும் வெளிநாட்டு மற் றும் உள்நாட்டு சுற்றுலா போன்றவற்றிலும் கலந்து கொள்ளவும் கூடாது.
புதிய விதிகளின் படி, மருந்து நிறுவனங்களின் ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர், அத்தகைய ஆய்வுக்காக முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ அமைப்புகளிடம் இருந்து முறைப்படியாக ஒப்புதல் பெறப்பட்டுள் ளதா என்பதையும் மருத் துவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் புதிய விதிமுறைகளில் கூறப்பட் டுள்ளன.
மேலும் மருந்து நிறுவனங்கள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை மருத்துவர்களுக்கு நேரும் போது, தனது தொழிலுக்கும், தான் பணிபுரியும் மருத் துவமனைக்கும் எந்தவித மான சீர்கேடும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.
Tuesday, October 20, 2009
லாபவெறிக்குப் பலியாகும் வைட்டமின் “சி”!
கர்ப்பிணிகள், ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் மற்றும் பற்களில் குறைபாடுகள் உள்ள சிறுவர்கள் ஆகியோருக்கு மிகவும் அத்தியாவசியமானது வைட்டமின் சி மாத்திரையாகும். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக இந்த மாத்திரைகள் கிடைக்காமல் இவர்கள் சிரமப்படுகின்றனர்.
இந்தப் பற்றாக்குறைக்கு மருந்து நிறுவனங்களின் அலட்சியம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மாத்திரைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதால் கிடைக்கும் லாபம் குறைவாக இருப்பதால் அதிக ஈடுபாட்டை அவர்கள் காட்டுவதில்லை. பற்றாக்குறை ஏற்படுத்துவதன் மூலம் விலையை அதிகரிக்க அரசுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
Monday, August 24, 2009
பன்றிக்காய்ச்சல் பீதியும் பன்னாட்டு வியாபாரமும்!
பறவைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன் குன்யா, சார்ஸ்... இப்போது பன்றிக் காய்ச்சல்! இப்படி ஒவ்வொருவிதமான பெயர் தாங்கிய நோய்களைப் பற்றி பீதியை கிளப்பு வதும், அதன் மூலம் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் கொள்ளையடிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக சுகாதார அமைப்பு (றாடி) மற்றும் அரசாங்கங் களின் தெளிவற்ற நடவடிக்கைகள் மக்களை மேலும் பயமுறுத்துவதாக உள்ளது.
பன்றிக்காய்ச்சல் என்பது இன்று புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட விஷயமல்ல. 1918ல் தோன்றிய ப்ளூ காய்ச்சலில் எச்1என்1 வைர ஸின் சாயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1977ல் எச்1என்1, எச்3என்2 போன்ற வைரஸ் கள் காணப்பட்டன. அப்போதிருந்து இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வரு கின்றன. இன்னும் எவ்விதமான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது பரிந் துரைக்கப்படும் தமிஃப்ளூ மாத்திரை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகளாக கூறப்படும் சோர்வு, தசைவலி, சளி, இருமல், வாந்தி அல்லது பேதி போன்றவற்றில் ஒன்றிரண் டை போக்கும் என்று கூறப்படுகிறதே தவிர அது குணப்படுத்தும் மருந்தோ, தடுப்பு மருந்தோ அல்ல. ஆனால் மருந்துக் கம்பெனிகள் தங் களுடைய சந்தையை துவங்கிவிட்டன. ஒரு தமிஃப்ளூ மாத்திரையின் விலை 300 ரூபாய். பீதியையும் தேவையையும் பொறுத்து இன் னும் விலை கூடினாலும் ஆச்சரியமில்லை.
பன்றிக்காய்ச்சல் பற்றிய ஆய்வுகளின் முடிவுகளும், நடைமுறையும் குழப்பமான வையாக உள்ளன.
* வைரஸ் என்பது உலகிலேயே மிகவும் நுண்ணிய உயிர் என்று ஆங்கில மருத்து வம் கூறுகிறது. இது துணி, முகமூடி போன்றவற்றின் நுண்துளைகளை விடச் சிறியது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பிற்காக எந்தவித பயனுமற்ற முகமூடி களை சந்தையில் உலவவிட்டது யார்?
* பன்றிக்காய்ச்சலுக்கு காரணமான எச்1என்1 வைரஸ் காற்றில் பரவுவதாகக் கூறப்படுகிறது. அப்படி காற்றில் அதி வேகமாகப் பரவும் வைரஸ் ஒரு குடும்பத் தில் ஒரு நபரை மட்டும் தாக்குகிறது. ஒரு ஊரில் 5, 10 பேர்களை மட்டும் தாக்கு கிறது. இன்னும், இலங்கை அகதி முகாம்க ளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் சுகாதார வசதியற்றவர்களிடம் ஏன் பரவவில்லை? காய்ச்சல் பற்றிய பீதியும், மருந்து வியாபாரமும் மட்டுமே பரவுகிறது.
* அவ்வப்போது ஏற்படும் பறவைக்காய்ச் சல், டெங்குக்காய்ச்சல், சிக்குன் குன்யா, சார்ஸ் போன்றவற்றிற்கு காரணமாக கூறப்படும் கிருமிகள் எங்கிருந்து வரு கின்றன என்பதும், குறிப்பிட்ட காலத்திற் குப்பின் எங்கு செல்கின்றன என்பதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
* அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மைய அறிக்கைகளின்படி 2005ம் ஆண்டு முதல் 2009 பிப்ரவரி வரை பன்றிக்காய்ச் சலால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமே 12 பேர்தான்! நான்கு ஆண்டுகளில் இல் லாத புதிய வேகம் கிருமிகளுக்கு எங்கி ருந்து கிடைத்தது என்பது புரியாத புதிர்தான்.
இப்போது கண்டறியப்பட்டுள்ள எச்1என்1 வைரசில் - வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய பன்றிகளின் மரபணுக்களும், பறவைகள் மற்றும் மனித மரபணுக்களும் இணைந்து காணப்படுவதாக நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியிருக்கிறது.
மரபணு மாற்ற தொழில்நுட்ப ஆய்வுகளே எச்1என்1 வைரசின் தோற்றத்திற்கும், பெருக் கத்திற்கும் காரணம் என்று கூறுகிறார் தமிஃப்ளூ ஆய்வுக்குழுவின் உறுப்பினர் டாக்டர் ஆஸ்ட்ரோ அட்ரியன் கிப்ஸ்.
இவ்வளவு ஆய்வுகளும் அதன் குழப்பங் களும் ஆங்கில மருத்துவ அடிப்படையிலா னவை. மாற்று மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபங்சர் போன்ற மருத்துவங்களை அரசு எப்போதும் போல் இப்போதும் கண்டுகொள்வதில்லை.
காய்ச்சல் என்பது உடலில் ஏற்பட்டிருக் கும் நோய்க்கூறுகளை உடலே வெளியேற்றும் முயற்சியாகும். உடலின் எதிர்ப்பு சக்திக் கும் - நோய்க்கூறுகளுக்குமான போராட்டம் தான் வெப்பமாக வெளிப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் என்பதும் நோய்க்கெதிரான உட லின் போராட்டம்தான். உடலிற்கு துணை செய்யும்படியான இயற்கையான சிகிச்சை முறைகளை அரசுகள் பரிந்துரைப்பதுதான் மக்களையும், பொருளாதாரத்தையும் காக்கும் ஒரே வழி! ரசாயனத் தடுப்பு மருந்துகளின் பின்னால் ஓடுவது பன்னாட்டுக்கம்பெனி களை ஊக்குவிப்பதற்கும், பொருளாதார சீரழி விற்கும் வழிவகுக்கும்!

